இர்பான் பதானுடன் விளையாடியதில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் இதுதான் – மனம்திறந்த யூசுப் பதான்

yusuf
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pathan 1

- Advertisement -

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது நேற்று அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இர்பான் பதானின் சகோதரரான யூசுஃப் பதான் இர்பான் பதான் ஆடிய காலத்தில் மிகச் சிறந்த தருணம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி யூசுப் கூறியதாவது : 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இறுதிப் போட்டி தான் நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடியதில் எனக்கு மறக்க முடியாத தருணம் என்று தெரிவித்தார்.

Yusuf 2

ஏனெனில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருவரும் ஒரே அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் நாங்கள் கிரிக்கெட் விளையாட தொடங்கியது முதல் அதன் பின்னர் எங்களது கிரிக்கெட் ஆர்வம் அதிகரிக்க பரோடா கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ஆடினோம் அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி இந்திய அணிக்காக ஆடினோம் அதுவரை எங்களின் கிரிக்கெட் மிகவும் சிறப்பான ஒன்றாகவே இருந்தது.

yusuf 1

இர்பான் பதான் எப்பொழுதும் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் சரி மனம் தராமல் இருப்பார். தோல்வியை கண்டு சோர்ந்து போகாமல் எப்போதும் மகிழ்ச்சியுடனும் முகத்தில் புன்முறுவலுடன் இருப்பார். அவரைப் பற்றிய எனது எண்ணங்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றும் ஓய்வுக்கான வாழ்த்துக்களையும் யூசுப் பதான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement