விராட் கோலி தனது கேரியரில் ஒருமுறை கூட அங்க போனதில்ல.. எல்லாரும் அவர பாத்து கத்துக்கணும்.. ரோஹித் பாராட்டு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களால் விளையாடவில்லை. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்.

அதை விட நவீன கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அளவுக்கு கடுமையான பயிற்சிகளை செய்து தம்முடைய உடலை கச்சிதமாக வைத்திருக்கும் விராட் கோலி அதை பயன்படுத்தி ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நிறைவு பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் கடைசி போட்டியில் பும்ரா போல பவுண்டரி எல்லையில் தாவி பிடித்து சிக்சரை அவர் தடுத்தது இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

ரோஹித் பாராட்டு:
இந்நிலையில் இந்திய வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்கு செல்லக்கூடிய பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விராட் கோலி எப்போதுமே காயத்தால் சென்றதில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு ஃபிட்னஸ்க்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலியை இளம் வீரர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“தன்னுடைய மொத்த கேரியரிலும் விராட் கோலி எப்போதுமே என்சிஏவில் இருந்ததில்லை. எனவே அவரிடம் இருக்கும் ஆர்வத்தை அனைத்து இளம் வீரர்களும் பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன். அவருடைய கவர் ட்ரைவ், பிளிக் போன்ற பேட்டிங் டெக்னிக்கை தனியாக விடுங்கள். முதலில் வீரர்கள் தாங்கள் இன்று இருக்கும் இடத்தின் தரம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”

- Advertisement -

“நான் போதுமான அளவுக்கு விராட் கோலியை பார்த்துள்ளேன். அவர் இதுவரை சாதித்துள்ளவற்றில் எளிதாக திருப்தியடைந்து விடலாம். அதனால் 2 – 3 தொடர்கள் கழித்து விளையாட வருகிறேன் என்று அவரால் எளிதாக சொல்ல முடியும். ஆனால் அவர் அனைத்து தொடரிலும் அணிக்காக இருப்பார். அது போன்ற பசியை ஒருவருக்கு யாரும் சொல்லித் தர முடியாது. நீங்கள் அதை மற்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியில் இனி தமிழக வீரர் அஷ்வின் அந்த சாதனையை படைக்க வாய்ப்பில்லை – வெயிட் பண்ணிதான் ஆகனும்

“அது தான் விராட் கோலி அல்லது மற்றவர்களை நீங்கள் டெக்னிக்கல் அளவில் பார்ப்பதற்கு முன்பாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதாவது அனைத்து நேரங்களிலும் நீங்கள் பசியுடன் இருந்து ஆர்வத்துடன் களத்திற்கு சென்று சூரிய வெளிச்சத்தில் பெருமையுடன் விளையாடி வேலையை முடிக்க வேண்டும். இந்த தகுதி தான் அனைத்து வீரர்களிடமும் முதலில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Advertisement