தோல்வியா பெரிதாக பார்க்கவேண்டாம். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி படைத்த விசித்திர சாதனை – விவரம் இதோ

- Advertisement -

நியுஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இந்திய அணியை துடைத்து அனுப்பியது. இந்நிலையில் இந்திய அணிக்கு தோல்வி இருந்தாலும் அதில் ஒரு சில வெற்றி கிடைத்துள்ளது.

iyer

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

பின்னர் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறிய போது வந்த மனிஷ் பாண்டே தன் பங்கிற்கு ரன்களை விளாசினார். கேஎல் ராகுல் உடன் சேர்ந்த இவர் 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து 4 மற்றும் 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.

Pandey-1

இந்திய அணி இதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக இருந்துவந்த மிடில் ஆடர் தொல்லை ஓய்ந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக பங்களிப்பை அளிக்கவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஷ்ரேயஸ் ஐயர் 4 ஆவது இடத்திலும், ராகுல் எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்றாற்போல் சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு பலம் தான்.

Advertisement