அவர மாதிரி ஒரு தங்கமான மனுஷன வெறுக்க உங்களுக்கு மனசே வராது – நட்சத்திர இந்திய வீரரை நெகிழ்ந்து பாராட்டிய பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்று முடிவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ஃபைனலுக்கு செல்ல பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதில் மே 28இல் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்காக மோத உள்ளன.

அதில் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் சாதனை படைத்து ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்து வரும் எம்எஸ் தோனி 42 வயதை தொடுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவருக்கு கோப்பையை வென்று கொடுத்து வெற்றியுடன் வழியனுப்ப சென்னை அணியினர் போராடுவார்கள் என்று அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

வெறுக்க மனசு வராது:
முன்னதாக கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத மாநிலத்தில் பிறந்து அடிமட்டத்திலிருந்து வந்து சர்வதேசம் முதல் ஐபிஎல் வரை தனக்கென்று ஒரு முத்திரை பதித்து பல கோடி ரசிகர்களுக்கு ரோல் மாடலாக திகழும் தோனிக்கு பல முன்னாள் வீரர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாகவே இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு போன்ற எதிரணி ரசிகர்கள் கூட தோனிக்காக மஞ்சள் நிற அணிந்து சென்னைக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய ரோல் மாடலாக போற்றும் சுனில் கவாஸ்கர் இத்தொடரில் ஒரு ரசிகனை போல் ஓடிவந்து தமது நெஞ்சில் தோனிடம் ஆட்டோகிராப் வாங்கியதை யாராலும் மறக்க முடியாது. அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் தோனியை அதற்கு நிகராக சிலர் வெளிப்படையாகவே வெறுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக 2007, 2011 உலக கோப்பையை “நான் மட்டும் ஒற்றை கையில் வாங்கி கொடுத்தேன்” என்று தோனி எப்போதுமே சொல்லாத போதும் அப்படி சொல்லியதாக ஒரு தரப்பினர் இப்போதும் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் கேப்டனாக செயல்படுவதாலும் கடைசி நேரத்தில் வந்து வெற்றிக்கு தேவையான ரன்களை அடிப்பதாலும் “மற்ற வீரர்களின் கடின உழைப்பை தோனி திருடுவதாக” சர்வ சாதாரணமாக ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவதெல்லாம் சகஜமாகும். ஆனால் நிறைகுடம் தளம்பாது என்ற வகையில் எதற்கும் செவி சாய்க்காத தோனி தொடர்ந்து தமது விளையாட்டில் இப்போதும் முழங்கால் வலியுடன் அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பிசாசு பிடிக்காமல் ஒருவரால் தோனியை வெறுக்க முடியாது என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இன்றைய இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட பல ஜாம்பவான் வீரர்களை ஆரம்ப காலங்களில் வாய்ப்பளித்து ஆதரவு கொடுத்து தோனி வளர்த்தவர்களில் ஒருவரான அவர் இது பற்றி இந்த போட்டிக்கு முன்பாக பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் மஹி மிகவும் கடினமானவர் என்று நினைக்கின்றனர். இருப்பினும் என்னை பொறுத்த வரை அது நகைச்சுவையாகும். நான் அவரை மகேந்திர சிங் தோனியாக பார்ப்பதில்லை”

இதையும் படிங்க:CSK vs GT : ப்ளீஸ் தல இன்னைக்காவது தீக்ஷனாவை தூக்கிட்டு இவருக்கு சேன்ஸ் குடுங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கோரிக்கை

“அவரிடம் நான் நிறையவற்றை கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக நேர்மறையான அணுகு முறையுடன் செயல்படுவது போன்ற பண்புகளை அவரிடம் அதிகம் பேசாமலேயே அவரைப் பார்த்தே கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் என்னை பொறுத்த வரை அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர் மற்றும் சகோதரர் என்பதால் எப்போதும் அவரிடம் விளையாட்டில் ஈடுபடுவேன். மேலும் ஏராளமான தோனி ரசிகர்களில் நானும் ஒருவன். இருப்பினும் நீங்கள் ஒரு சரியான பிசாசு பிடித்திருந்தால் மட்டுமே எம்எஸ் தோனியை வெறுக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement