CSK vs GT : ப்ளீஸ் தல இன்னைக்காவது தீக்ஷனாவை தூக்கிட்டு இவருக்கு சேன்ஸ் குடுங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கோரிக்கை

Theekshana
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் சுற்றின் முதலாவது குவாலிபயர் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.

Theekshana 1

- Advertisement -

இந்நிலையில் இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக எந்தெந்த மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் ரசிகர்கள் அனைவரும் மகேஷ் தீக்ஷனாவை விளையாட வைக்க வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக மிட்சல் சான்ட்னருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

ஏனெனில் மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைப்பதில்லை அதேபோன்று கடந்த சில போட்டிகளாகவே அவர் ரன்களையும் எளிதாக வழங்கி வருகிறார். அதைவிட குறிப்பாக ஃபீல்டிங்கில் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறார்.

Santner

இந்த தொடரில் மகேஷ் திக்சனா ஏகப்பட்ட கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதோடு பந்தினை துரத்துவதிலும் வேகம் காட்ட மறுக்கிறார். இப்படி பீல்டிங்கில் மெதுவாக செயல்படும் இவரை தோனி எவ்வாறு அணியில் வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு அவருக்கு பதிலாக மிகச் சிறப்பாக பீல்டிங் செய்வதுடன் அருமையாக பந்துவீசும் மிட்சல் சான்ட்னருக்கு அணியில் இடம் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : GT vs CSK : சுப்மன் கில் இல்ல, சிஎஸ்கே’வை வீழ்த்த போகும் துருப்பு சீட்டு அவர் தான் – குஜராத் வீரரை பாராட்டிய சேவாக்

சென்னை போன்ற மைதானங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே அணியில் இருந்து வரும் மிட்சல் சான்ட்னருக்கு வாய்ப்பினை வழங்கினால் நிச்சயம் அவர் பந்துவீச்சில் கை கொடுப்பதோடு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்துவார். அதே நேரத்தில் அவரிடம் பேட்டிங் செய்யும் திறமையும் இருப்பதினால் அவருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement