இங்கிலாந்து தொடரில் அவர மாதிரி மகத்தான பிளேயர் அசத்தலன்னு யார் சொன்னா.. நாசர் ஹுசைன் பாராட்டு

Nasser Hussain 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஜெய்ஸ்வால், கில், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா போன்ற சில நட்சத்திர சீனியர் வீரர்கள் தொடர்ச்சியாக அசத்தாமல் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நட்சத்திர அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தத் தொடரில் கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

மகத்தான வீரர்:
இருப்பினும் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட அவர் முதல் 3 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அதனால் 500 விக்கெட்டுகளை எடுத்த அனுபவமிக்க அஸ்வின் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் இங்கிலாந்தை 145 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் அஸ்வின் போன்ற மகத்தான வீரரை நீண்ட நாட்கள் நீங்கள் கீழே வைத்திருக்க முடியாது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். குறிப்பாக ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் கேரம் பந்துகளை பயப்படுத்தி 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் என்னுடைய தரத்தை நிரூபித்ததாக நாசர் ஹுன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி டெய்லி மெயில் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்த தொடரில் அஸ்வின் சற்று அமைதியாகவே இருக்கிறார் என்று சிலர் பேசினர். ஆனால் 4வது போட்டி ஒரு மகத்தான வீரரை நீங்கள் தொடர்ந்து கீழே வைத்திருக்க முடியாது என்பதை அவர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்தியது. அதை ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் காண்பித்தார். 2வது இன்னிங்ஸில் அஸ்வின் அதை அடிக் கோடிட்டு நிரூபித்தார்”

இதையும் படிங்க: ரஜத் பட்டிதாருக்கு பதிலாக 5 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அறிமுக வீரருக்கு வாய்ப்பு – யார் அந்த வீரர்?

“குறிப்பாக ரோகித் சர்மா புதிய பந்தை கொடுத்ததும் அவருடைய கண்களில் நெருப்பு பறந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும். தன்னுடைய முத்திரையை இந்த தொடரில் பதிக்க தயாராக இருந்த அவர் பென் ஃபோக்ஸை கேரம் பால் வைத்து வீழ்த்தினார். 3வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஸ்வினை மிகவும் தாமதமாக பந்து வீச வைத்தோம் என்பதை ரோகித் சர்மா புரிந்து கொண்டார். அதன் காரணத்தாலேயே பென் டக்கெட்டுக்கு எதிராக அஸ்வின் தடுமாறினார். இருப்பினும் அந்த தவறை மீண்டும் 4வது போட்டியில் ரோகித் சர்மா செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement