- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திறமை இருந்தா காட்டுங்க.. அதை விட்டுட்டு பாகிஸ்தானுக்கு ஏன் இந்த குறுக்கு புத்தி? யோக்ராஜ் விளாசல்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக துபாயில் நடைபெற்ற நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மறுபுறம் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியையும் சேர்த்து அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்த பாகிஸ்தான் கோப்பையை தக்க வைக்க முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

முன்னதாக துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 242 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் குவித்தார். அதனால் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அப்ரார் அகமது வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் அவரை அப்ரார் அகமது கையை கட்டிக்கொண்டு ஒருப் பக்கமாக தலையை அசைத்து வழியனுப்பி வைத்தார்.

- Advertisement -

குறுக்கு புத்தி:

அது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது ஒரு புறமிருக்க விராட் கோலி 85 ரன்களை கடந்ததும் சதத்தை அடிக்கும் நோக்கத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக இந்தியாவுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது விராட் கோலி சதத்தை அடிக்க 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாஹீன் அப்ரிடி அவருடைய சதத்தை தடுக்கும் வகையில் 3 ஒய்ட்களை போட்டார்.

அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் லூசர் லூசர் என்று கூச்சலிட்டு அப்ரிடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் அதையும் தாண்டி விராட் கோலி பவுண்டரியுடன் சதத்தை அடித்தார். இந்நிலையில் அப்ரிடிக்கு எதற்கு இந்த குறுக்குப் புத்தி என்று முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:

“எதிரணியை அவுட்டாக்கிய பின் பாகிஸ்தானின் ஒரு வீரர் (அப்ரார்) அப்படி கொண்டாடினார். பின்னர் விராட் கோலி சதத்தை நெருங்கினார். அப்போது உங்களிடம் திறமையிருந்தால் நீங்கள் அவரை அவுட் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒய்ட் பந்துகளை போட்டால் அவரால் சதத்தை அடிக்க முடியாதா? இது குறுக்கு புத்தி”

இதையும் படிங்க: டாப் 10இல் 4 இந்தியர்கள்.. தரவரிசையிலும் கம்பேக் கொடுத்த கோலி.. பாபர் நெருங்க முடியாத உயரத்தில் கில்

“வெற்றி தோல்வியை தாண்டி நீங்கள் களத்தில் சிங்கம் அல்லது சாம்பியனை போல விளையாட வேண்டும். ஆனால் பாகிஸ்தானுக்கு தங்கள் அணியிலும் நாட்டிலும் நல்ல தலைமை இல்லை. அவர்கள் பிரதமர் கூறியதைக் கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை நான் பாகிஸ்தானுக்கு பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -