தோனி, கோலி மட்டுமல்ல இவங்களும் யுவ்ராஜ்க்கு துரோகம் பண்ணிட்டாங்க – யுவ்ராஜ் தந்தை கடும் சாடல்

Yograj
- Advertisement -

இந்திய அணியில் தோனி நுழைந்ததில் இருந்து தற்போது வரை தோனியை குறை செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். இவர் முன்னாள் இந்திய வீரரும் கூட. ஒவ்வொரு முறை யுவராஜ் சிங் அணியில் இருந்து வெளியேற்றப்படும் போதெல்லாம் இதற்கு காரணம் தோனி மட்டும்தான் என்று அவர் மீது பழி போடுவதை வழக்கமாகக் கொண்டவர் யோக்ராஜ்.

Yuvi 3

- Advertisement -

இந்நிலையில் புதிதாக ஒருவரையும் சேர்த்து அவரும் தனது மகனின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறியுள்ளார் யோகராஜ். இந்திய அணி 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வெல்ல மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். அதன் பின்னர் சரியாக ஆடாத காரணத்தால் இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தனது மகன் யுவராஜ் சிங்கின் பல தோல்விகளுக்கு காரணம் தோனி கோலி மட்டுமில்லை தேர்வு குழுவினர் தான் என்று கூறியுள்ளார் யோகராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில்…

yuvi

தோனி மற்றும் கோலி ஆகிய இருவருடன் சேர்ந்து தேர்வு குழுவினரும் பழிவாங்கினார். இதில் தேர்வு குழுவில் இருந்த ஒருவருக்கு ஏ,பி,சி,டி கூட தெரியாது. அவரை எல்லாம் நியமித்திருக்கிறார்கள். இந்திய தேர்வுக் குழுவை சேர்ந்த அங்க்ரட் சிங் தேர்வு குழு கூட்டங்களில் யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்க கூடாது என்று கூறிவந்தார். யுவராஜ் சிங்கை பலர் முதுகில் குத்தி விட்டனர் அவர்களில் இவரும் ஒருவர் என்று இஷ்டத்திற்கு பேசியுள்ளார் யோகராஜ் சிங்.

- Advertisement -

ஏற்கனவே யுவராஜ்சிங் கேப்டனாக ஆகாததற்கு காரணம் தோனி தான் என்றும் தோனி இந்திய அணியில் நுழையும்போது யுவராஜ் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தார். ஆனால் அவரிடம் கேப்டன்ஷிப் கொடுக்காமல் தோனிக்கு கொடுத்தது யுவராஜ் சிங்கிற்கு செய்த துரோகம் என்றும் யுவராஜ் சிங்கின் தந்தை தோனியை தாக்கி பேசியிருந்தார்.

Yuvraj 1

மேலும் அவ்வப்போது அவர் தோனியை தாக்கி பேசினாலும் யுவராஜ் சிங் இதுவரை தோனி குறித்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் நிதானம் காத்து வருகிறார். இருப்பினும் யுவ்ராஜ் சிங் போன்ற பெரிய வீரருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு கடுமையான முடிவுதான் இருந்தாலும் அவர் விளையாடிய வரை இந்திய அணிக்காக ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக விளையாடி அவரது முத்திரையை பதித்துவிட்டு இந்திய அணியை விட்டு விலகி உள்ளார்.

Yuvraj

யுவ்ராஜின் பங்களிப்பினால் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. இன்றளவும் யுவராஜ் சிங்கினை இந்திய ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் தந்தை எவ்வளவுதான் தோனியை தாக்கி பேசினாலும் தோனி யுவராஜின் தந்தை குறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை கூறியதில்லை. மேலும் அவரது கருத்துக்களை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement