சச்சினின் மகன் என்பதை மறந்துடுங்க, முதல் சதமடிக்க அர்ஜுனுக்கு கொடுத்த கோச்சிங் பற்றி யோக்ராஜ் சிங் ஓப்பன்டாக்

Yograj Singh Arjun Tendulkar
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சிக் கோப்பையின் 2022 – 23 சீசனில் முன்னாள் ஜாம்பவான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடுகிறார். மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே அங்கு விளையாடும் வாய்ப்பை பெறாமல் இருந்து வரும் அவர் தனது தந்தை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பரிந்துரைகள் எதுவும் இல்லாமல் சொந்த காலில் வாய்ப்புகளை பெறுவதற்கு போராடி வந்தார். அதனாலேயே மும்பை அணியில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறாத அவர் வேறு வழியின்றி அருகில் இருக்கும் கோவா மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து அந்த அணிக்காக விளையாட துவங்கியுள்ளார்.

Arjun-Tendulkar

- Advertisement -

அந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய அவர் அற்புதமாக பேட்டிங் சதமடித்து 120 ரன்கள் குவித்து கோவா 547/9 ரன்கள் எடுக்க உதவினார். குறிப்பாக 6வது விக்கெட்டுக்கு சூயஸ் பிரபுதேசாயுடன் 212 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த சாதனை வீரர்களின் பட்டியலிலும் இணைந்தார்.

குறிப்பாக 1988ஆம் ஆண்டு தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கர் சதமடித்திருந்த நிலையில் தனது தந்தையை போலவே 34 வருடங்கள் கழித்து அறிமுக போட்டியிலேயே சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உருவெடுத்து வரும் அவர் இடது கை பேட்ஸ்மேனாக விளயாடி வருகிறார். இந்நிலையில் அறிமுக போட்டியிலேயே அர்ஜுன் டெண்டுல்கர் சதமடிப்பதற்கு முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் பயிற்சி கொடுத்து உதவியுள்ளார்.

sachinarjun

யோக்ராஜ் கோச்சிங்:

நட்சத்திர ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் அவர்களின் தந்தையான யோஜ்ராஜ் இந்தியாவுக்காக 1 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஓய்வுக்கு பின் இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலைகளை செய்து வருகிறார். அந்த நிலையில் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த பயிற்சியை கொடுத்ததாக தெரிவிக்கும் யோக்ராஜ் சிங் நீங்கள் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதை மறந்து விட்டு வந்தால் மட்டுமே பயிற்சி கொடுக்க முடியும் என்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“செப்டம்பர் மாத முதல் வாரத்தில் யுவராஜிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. குறிப்பாக “அப்பா சண்டிகரில் அர்ஜுன் 2 வாரங்கள் இருப்பார். அவருக்கு நீங்கள் பயிற்சி கொடுக்குமாறு சச்சின் டெண்டுல்கர் என்னிடம் கேட்டுக் கொண்டார்” என்று யுவ்ராஜ் என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் எப்படி முடியாது என்று சொல்ல முடியும். ஏனெனில் சச்சின் என்னுடைய மூத்த மகன் போன்றவர். ஆனால் அந்த சமயத்தில் நான் ஒரு கண்டிஷன் போட்டேன். அதாவது “என்னுடைய பயிற்சி எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதில் யாரும் தலையிடக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன்” என்று யுவராஜிடம் நான் கூறினேன்”

Yograj

“அத்துடன் அடுத்த 15 நாட்களுக்கு நீங்கள் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதை மறந்து விடுங்கள் என்று அர்ஜுனிடம் கூறினேன். ஏனெனில் சச்சினின் மகன் என்பதால் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள பயிற்சியாளர்கள் தயங்குவார்கள். அதனால் முதலில் உங்கள் தந்தையின் நிழலிலிருந்து வெளியே வாருங்கள் என்று அர்ஜுனிடம் கூறினேன். மேலும் அவரது பயிற்சிகளை பார்த்த பின் இவர் அதிரடியாக வருவார் என்பதை கண்டறிந்து அதை உடனடியாக சச்சின் மற்றும் யுவராஜ் ஆகியோரிடம் தெரிவித்தேன். அத்துடன் சச்சினுக்கு போன் செய்து ஏன் அர்ஜுன் அதிகமாக பேட்டிங்கில் கவனம் செலுத்துவதில்லை என்றும் கேள்வி எழுப்பினேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரட்டைசதம் அடித்த அன்று இரவு இஷான் கிஷனின் தந்தை என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? – இதை படிங்க

மேலும் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து 2 மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அது போன்ற உடற்பயிற்சிகள் தான் காயங்களை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார். இறுதியில் தமது பயிற்சியில் சதமடித்த அர்ஜுனை இன்னும் நிறைய சதங்கள் அடிப்பீர்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோக்ராஜ் பாராட்டியுள்ளார்.

Advertisement