- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது ஸ்கூல் இல்ல.. 19 வயதில் ஸ்டீவ் வாக் ஸ்லெட்ஜ் செய்ததே.. 2007இல் ஃபிளின்டாப் பதிலடிக்கு காரணம்.. யோக்ராஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் யுவ்ராஜ் சிங் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா 28 வருடங்கள் கழித்து வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்தத் தொடரின் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனாக போற்றப்படுகிறார்.

அப்படிப்பட்ட அவரை 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஃப்ளின்டாப் ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு அசராத யுவ்ராஜ் சிங் அவரை நோக்கி பாய்ந்த போது நடுவர்கள் தடுத்தார்கள். ஆனால் அதற்கு பதிலடியாக அடுத்த ஓவரில் ஸ்டுவர்ட் ஃப்ராடை சூறையாடிய யுவராஜ் சிங் அடுத்த ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஸ்டீவ் வாக் ஸ்லெட்ஜிங்:

இந்நிலையில் 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் இந்தியாவுக்காக 19 வயதில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 84 (80) ரன்களை குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதனால் தம்முடைய முதல் போட்டியிலேயே அசுரன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் “இது ஸ்கூல் அல்ல” என்று சொல்லி தன்னுடைய மகனை ஸ்லெட்ஜிங் செய்ததாக அவருடைய அப்பா யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதுவே 2007இல் ஃபிளின்டாப் போன்றவர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலடியைக் கொடுப்பதற்கான விதையை யுவ்ராஜுக்குள் விதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி யோக்ராஜ் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

2007இல் ஃபிளின்டாப்’க்கு பதிலடி:

“கிரிக்கெட் என்பது என்னைப் பொறுத்த வரை ஜென்டில்மேன்கள் மோதும் போராகும். களத்தில் ஆஸ்திரேலியர்கள் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. அவர்கள் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி திட்டுவார்கள். அவர்கள் அகராதியில் இருக்கும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டியிலும் விளையாட.. இந்த 2 விஷயத்தை செஞ்சா போதும்.. பரத் அருண் அறிவுரை

“அறிமுகப் போட்டியில் யுவராஜ் பந்தில் அடி வாங்கி கீழே விழுந்தது நினைவிருக்கிறது. அப்போது அவரிடம் சென்ற ஸ்டீவ் வாக் “எழுந்திரு, இது ஒன்றும் ஸ்கூல் கிரிக்கெட்டல்ல ஃபிளடி குழந்தையே” என்று சொன்னார். அப்போது யுவ்ராஜ் எழுந்து நிற்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து அது போன்ற சமயங்களில் ஃபிளின்டாப்’க்கு கொடுத்ததைப் போல யுவராஜ் பதிலடி கொடுக்கத் துவங்கினார்” என்று கூறினார். மேலும் களத்தில் யாரும் மோசமாக பேசிக் கொள்ளக்கூடாது என்றும் தற்கால வீரர்களுக்கு யோக்ராஜ் அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -