- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முச்சதத்தை விட இதை மிஸ் பண்ணதுக்கு யுவி வேதனைப்பட்டாரு.. லாரா மாதிரி கில் 400 அடிப்பாரு.. யோக்ராஜ் பேட்டி

இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் விளாசி நிறைய சாதனைகளை படைத்தார்.

அவருடன் வாஷிங்டன் சுந்தர் 42, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் தம்முடைய மகன் யுவ்ராஜ் சிங் பயிற்சியில் வளர்ந்த சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்தது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் முச்சதத்தை தவற விட்ட சுப்மன் கில் அவுட்டாகாமல் ஆட்டத்தை முடிக்காதது வேதனையை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

யுவ்ராஜ் வளர்ப்பு:

ஜாம்பவான் பிரையன் லாரா 400, 500 ரன்கள் அடிக்கும் போது சுப்மன் கில் போன்ற இந்திய வீரர்களால் முடியாதா? என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “யுவ்ராஜ் சிங் தம்முடைய கேரியரில் சாதித்த விஷயங்களை பயிற்சியின் வாயிலாக மற்ற வீரர்களுக்கு கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி. கில், அர்ஷ்தீப், அபிஷேக் சர்மா ஆகியோர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்”

“சுப்மன் கில் 200இல் செய்து கொண்டிருந்த போது 250 நாட் அவுட்டாக ஆட்டத்தை முடிக்க விரும்பினேன். ஆனால் அவர் அவுட்டான போது நான் வேதனையை சந்தித்தேன். யுவ்ராஜூம் அதே உணர்வைக் கொண்டிருந்தார். இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்த பின்பும் அவுட்டானது குற்றம் என்பதை கில் உணர்ந்தார். நீங்கள் 200, 250, 300 ரன்கள் அடித்தாலும் நாட் அவுட் என்று உங்கள் பெயருடன் இருந்தால் உங்களுடைய தவறுகள் திருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்”

- Advertisement -

300, 400 ரன்ஸ் அடிப்பாரு:

“சுப்மன் கில் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. தயவு செய்து கிரிக்கெட்டில் விளையாடாத யாரும் பேசாதீர்கள் என்பதே அவர்களுக்கு என்னுடைய பதிலாகும். கில் தன்னுடைய மேல் கையில் வேலை செய்துள்ளார். யுவராஜ், கம்பீர் போன்றவர்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு ரன்கள் விக்கெட்டுகள் எடுத்தாலும் அவர்கள் உங்களை திட்டுவார்கள்”

இதையும் படிங்க: எல்லாம் ஓகே.. 269 ரன்ஸ் அடிச்சும் இதை ஏன் மிஸ் பண்ண.. தந்தையிடம் இருந்து வந்த கால் குறித்து – சுப்மன் கில் பேச்சு

“சச்சின் தன்னைத்தானே திட்டிக் கொள்வார். கவாஸ்கர் அவுட்டாகி விட்டால் பயிற்சியை விட்டு வெளியேறுவார். அந்த அணுகுமுறை கொண்டிருப்பவர்களே சிறந்தவர்களாக வருவார்கள். கில் 300, 400 போன்ற ரன்களை அடித்து சாதனைகள புரிவார். பிரைன் லாராவால் 400*, 500* ரன்கள் அடிக்க முடிந்தால் நம்மாலும் முடியும். கில் தனது வலது கை பிரச்சனையை முன்னேற்றியுள்ளார் அப்பா என்று 3 நாட்கள் முன்பாக யுவ்ராஜ் சொன்னார்” எனக் கூறினார்.

- Advertisement -