ஆண்களை போல்..இனி பெண்களும் இதை செய்ய வேண்டும்.! அதிர்ச்சியில் மகளிர் கிரிக்கெட் அணி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ‘யோ யோ’ டெஸ்ட் என்ற தேர்வு முறை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சியடையும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் விளையாட தகுதி உடையவர்களாக அறிவிக்கபடுகின்றனர். தற்போது இந்த ‘யோ யோ’ தலைவலி இந்திய மகளீர் கிரிக்கெட் அணியையும் தொற்றிக்கொண்டுள்ளது.

yo yo

- Advertisement -

இந்திய மகளீர் அணி வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்குபெற உள்ளது இந்நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய விளையாட்டு அகாடமியில் இந்திய மகளீர் அணி வீராங்கனைகள் ‘யோ யோ’ டெஸ்டில் பங்கேற்று வருகின்றனர். இந்த தகவலை இந்திய மகளீர் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கௌசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிகரமாக முதல் நாள் யோ யோ டெஸ்ட் முடிவடைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய மகளீர் கிரிக்கெட் அணிக்கும் “யோ யோ” கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

இலங்கை சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மகளீர் ஆசிய உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணம், இந்திய மகளீர் அணியின் பயிச்சியாளரான துஷார் அரோதி என்று இந்திய மகளீர் அணியில் உள்ள சில இளம் வீராங்கனைகள் குற்றச்சாட்டை வைத்தனர். இதனை தொடர்ந்து இந்திய மகளீர் அணியின் புதிய பயிற்சியாளராக இந்த அணியின் முன்னாள் வீரர் ரமேஷ் பவார் நியமிக்கப்ட்டுள்ளார்.

women cricket

வரும் செப்டெம்பர் மாதம் இந்திய மகளீர் அணி இலங்கை சென்று விளையாடவுள்ளது. இது ரமேஷ் பவாருக்கு பயிற்சியாளராக முதல் போட்டியாக இருக்க போகிறது. மேலும், இந்த தொடருக்கான இந்திய மகளீர் அணி வீராங்கனைகளை ‘யோ யோ’ டெஸ்ட் மூலம் தேர்வு செய்ய இருப்பதால் இந்திய மகளீர் அணியில் ஒரு சில மாற்றங்களும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement