அந்த ஒரு ஷாட்டை 800 டைம்ஸ் பயிற்சி பண்ண அவர் சூப்பர்ஸ்டாரா வருவாரு பாருங்க – இளம் வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். அதனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று ஓரளவு அசத்தி வந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமும், ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதமும், டி20 தொடரான சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் சதமும் அடித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து அசத்தி வந்தார்.

அந்த வரிசையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் உச்சகட்டமாக ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற ஆல் டைம் சாதனை படைத்த அவர் அதிவேகமாக அரை சதமடித்த (14 பந்துகள்) வீரர் என்ற சரித்திரமும் படைத்தார். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக சீனியர் அளவில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் அறிமுக போட்டியிலேயே சதமடித்து ஏராளமான சாதனைகளை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

வருங்கால சூப்பர்ஸ்டார்:
அதை தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியில் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது போட்டியில் அடித்து நொறுக்கி 84* ரன்கள் குவித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து மிகவும் இளம் வயதில் அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய தொடக்க வீரர் ஆகிய சாதனைகளையும் படைத்தார். அதிலும் கெவின் பீட்டர்சன் போல அவர் அடித்த ஸ்விட்ச் ஹிட் சிக்ஸர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.

இந்நிலையில் மிகவும் ரிஸ்க்கான அந்த சிக்ஸரை 7 மணி நேரங்கள் பயிற்சி செய்து 800 முறை முயற்சி செய்த காரணத்தாலேயே வெற்றிகரமாக அடிக்க முடிந்ததாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய முதல் 4 சர்வதேச போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள ஜெய்ஸ்வால் வருங்காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வெற்றி நடை போட வைக்கப்போகும் ஸ்டார் அல்ல சூப்பர்ஸ்டார் என பாராட்டியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்காக அவர் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அதில் அவர் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதில் முதல் விருதை தன்னுடைய மிகச் சிறப்பான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து அவர் வென்றார். இருப்பினும் அறிமுக டி20 போட்டியில் சொற்ப ரன்னில் அவுட்டான அவர் மீண்டும் 2வது போட்டியில் வலுவாக கம்பேக் கொடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த சமயத்தில் என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் வருங்கால சூப்பர்ஸ்டாரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்”

“அவர் வெறும் ஸ்டார் அல்ல சூப்பர் ஸ்டார். நிச்சயமாக அவர் வருங்காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்க முடியும். ஏனெனில் பல்வேறு ஷாட்டுகளைக் கொண்டுள்ள அவரிடம் நல்ல பொறுமையும் கடினமான உழைக்கும் பண்பும் இருக்கிறது. குறிப்பாக அவர் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சிகளை செய்தார். அதிலும் குறிப்பாக வலைப்பயிற்சியில் ஸ்விட்ச் ஹிட் ஷாட் சுமார் 800 முறை பயிற்சி செய்தார்”

இதையும் படிங்க:தோனியின் வார்த்தைகள மதிக்காம தப்பா யூஸ் பண்றாங்க, இந்திய அணியில் நிலவும் குளறுபடிகள் – குறித்து வெங்கடேஷ் பிரசாத் கவலை

“அந்த பயிற்சியின் நல்ல முடிவை தான் இந்த உலகம் பார்த்தது. ஆனால் அந்த அளவில் ஒரு கிரிக்கெட்டர் சிறப்பாக செயல்படுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல ஏற்கனவே நல்ல துவக்கத்தை பெற்றுள்ள ஜெய்ஸ்வால் தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்க்கும் அளவுக்கு வருங்காலங்களில் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement