- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டிராவிட் மற்றும் சேவாக் ஆகியோரது சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 10 அரைசதம் என 1798 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை தற்போது நிரந்தர இடத்தினை பிடித்துள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும், நீண்ட எதிர்காலம் கொண்ட பேட்ஸ்மேனாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

டிராவிட் மற்றும் சேவாக் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால் :

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை முதன்மை வீரராக இடம்பெற்று விளையாடி வரும் ஜெய்ஸ்வால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் ஜெய்ஸ்வால் முன்னாள் இந்திய ஜாம்பவான்களான வீரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது முக்கிய சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் ஜெய்ஸ்வால் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 இன்னிங்ஸ்களில் 1798 ரன்கள் குவித்துள்ள அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் மேலும் 202 ரன்களை குவித்தால் 39 இன்னிங்ஸ்களிலேயே 2000 ரன்களை எட்டுவார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடணுமா? முக்கிய அறிவுரையை வழங்கிய – ராகுல் டிராவிட்

முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோர் தங்களது 40-ஆவது இன்னிங்சில் 2000 ரன்களை தொட்டிருந்தனர். அதுவே இந்திய வீரர்கள் விரைவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்ததாக இதுவரை சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையை முறியடிக்க இன்னும் ஜெய்ஸ்வாலுக்கு மூன்று இன்னிங்ஸ்கள் எஞ்சியிருக்கும் வேளையில் அந்த மூன்று இன்னிங்ஸ்களில் 202 ரன்களை அடித்தால் அவர் இந்த சாதனையை நிகழ்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -