
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை எழுந்து 318 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 38 ரன்கள் எடுத்த நிலையிலும், சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். அவர்களை தவிர்த்து துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 253 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
அதேபோன்று சுப்மன் கில் 68 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் மட்டுமே குவித்து களத்தில் இருக்கிறார். இன்றைய நாளில் 318 ரன்களை குவித்திருக்கும் இந்திய அணியானது நாளை முழுவதும் பேட்டிங் செய்யும் பட்சத்தில் மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்லும். இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டான் பிராட்மேனுக்கு அடுத்து ஒரு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
23 வயதுக்குள்ளாக அதிகமுறை 150+ ரன்களை அடித்த வீரராக டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அவர் 23 வயதுக்குள் எட்டு முறை 150+ ரன்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்து தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 23 வயதிற்குள்ளாக ஐந்து முறை 150+அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 43 வயதானாலும் எதிரிகளிடம் பாய்ந்து சண்டை போட பிடிக்கும்.. காரணம் இதான்.. கம்பீர் ஓப்பன்டாக்
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என்பதே பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.