வங்கதேச வீரர்கள் சீண்டியும் நான் அமைதியாக இருந்ததுக்கு சச்சின், டிராவிட் கூறிய இந்த வார்த்தை தான் காரணம் – ஜெய்ஷ்வால் பேட்டி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று உலக கோப்பையினை முதல் முறையாக கைப்பற்றியது. அதோடு தாங்கள் வெற்றி பெற்றதை மிகுந்த ஆவேச உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

ban 1

- Advertisement -

மேலும் வங்கதேச வீரர்கள் இந்திய அணி வீரர்களை நோக்கி சகட்டுமேனிக்கு வார்த்தை போரிலும் ஈடுபட்டனர். இதனால் போட்டியின் முடிவில் இந்த வார்த்தைப் போர் கைகலப்பு வரை சென்றது. மேலும் 5 வீரர்கள் ஐசிசி எச்சரிக்கப்பட்டனர். இந்தியா அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை வங்கதேச பந்து வீச்சாளர்கள் அதிக அளவு சீண்டி உள்ளனர்.

ஆனால் ஜெய்ஷ்வால் அதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் பேட்டிங் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அந்தப் போட்டியில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் இறுதியில் அவர்கள் அவ்வளவு வம்பிழுத்தும் அமைதியாக பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில் : நான் இவ்வளவு பொறுமையாக அமைதியாக பெவிலியன் திரும்ப இதற்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தான்.

Ind-u-19

அவர்கள் என்னுடைய பேட் மட்டுமே பேசவேண்டும் வாய் பேச கூடாது என்ற நினைப்போடு நீ விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறி இருந்தார்கள். நான் அவர்களுடைய ஆலோசனை தான் மனதில் வைத்து இருந்தேன். அதனால்தான் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபடவில்லை என்று ஜெய்ஷ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement