லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இன்னும் பிரகாசமாக்கியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணிக்கெதிரான வெற்றி குறித்து : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 2020 ரன்களை குவிக்க பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியதாவது : இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணத்துடன் களமிறங்கினோம். அந்த வகையில் அனைவருமே இந்த வெற்றிக்கு கை கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
பந்துவீச்சின் போது ஜோப்ரா ஆர்ச்சர், பிரிஜேஷ் ஆகியோர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று மற்ற வீரர்களும் அவர்களுக்கு கை கொடுத்திருந்தனர். குறிப்பாக ஆர்ச்சர் நம்ப முடியாத அளவிற்கு பந்துவீசி இருந்தார். பேட்டிங்கை பொறுத்தவரை வைபவ் சூரியவன்சி மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டம் போட்டியை முற்றிலுமாக எங்கள் வசம் கொண்டு வந்தது.
இதையும் படிங்க : மிகப்பெரிய சாதனையுடன் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
இந்த அணியை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் வீரர்கள் அனைவரும் கடினமாக உழைத்து அதனை மைதானத்திலும் வெளிக்காட்டி வருகிறார்கள். இனிவரும் கடைசி போட்டியிலும் நிச்சயமாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.



