மிகப்பெரிய சாதனையுடன் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

RR vs LSG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான 64-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சாதனையுடன் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ச் 96 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 60 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக யஷ் ராஜ் புஞ்சா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 93 ரன்களையும், துருவ் ஜுரேல் 53 ரன்களையும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தற்போது ஏழு வெற்றுகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஒரு மாபெரும் சாதனையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் 220+ ரன்களை சேசிங் செய்ததோடு சேர்த்து இதுவரை ஐபிஎல் தொடரில் நான்கு முறை 220+ ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு கே.எல் ராகுலை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? – அகார்கர் விளக்கம்

ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மூன்று முறை 220+ ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றிருந்த வேளையில் அவர்களை தாண்டி நான்காவது முறையாக இந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது. அதோடு ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் ஏழாவது முறை 200+ ரன்களை செய்து வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement