ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அப்படி வெளியான அறிவிப்பில் சுப்மன் கில்லின் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூன்று புது முக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே வேளையில் சில வீரர்களுக்கு ஓய்வும் வழங்கப்பட்டிருந்தது.
கே.எல் ராகுலுக்கு துணை கேப்டன் பதவி வழங்கியது ஏன்? : அகார்கர் விளக்கம்
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. அதேவேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல் ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியை பொறுத்த வரை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தான் துணை கேப்டனாக இருந்து வந்தார். இவ்வேளையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ள இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் கூறியதாவது : கே.எல் ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் அவரை துணை கேப்டனாக தேர்வு செய்தோம். மற்றபடி ரிஷப் பண்ட்டை நீக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணம் கிடையாது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் தொடரில் பும்ரா, ஜடேஜா, அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? – அகார்கர் விளக்கம்
ரிஷப் பண்ட் கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் முழு கவனத்தையும் பேட்டிங்கில் செலுத்த வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இதற்கு பின்னால் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



