ஆப்கானிஸ்தான் தொடரில் பும்ரா, ஜடேஜா, அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? – அகார்கர் விளக்கம்

Ajit Agarkar
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. வெகு விரைவில் துவங்க இருக்கும் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அந்த இரண்டு தொடர்களுக்குமான கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் வீரர்களுக்கு இடம் வழங்காதது ஏன்? :

மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு என 15 பேர் கொண்ட இந்திய அணியையும், ஒருநாள் போட்டிகளுக்கு என 15 பேர் கொண்ட இந்திய அணியும் தனித்தனியே அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தொடர்களுக்கான அணியிலும் நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய நட்சத்திர வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு தொடரிலுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இப்படி அவர்கள் மூவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என்பது குறித்த கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வந்தது. இவ்வேளையில் அவர்கள் மூவரையும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யாதது ஏன்? என்பது குறித்து தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பும்ரா தொடர்ச்சியாக விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளோம்.

அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் அவர் பங்கேற்பார் என்று அகார்கர் உறுதி செய்துள்ளார். மேலும் அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்படி ஆப்கானிஸ்தான் தொடரில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் அடுத்த தலைமுறை வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதர் ஆகியோருக்கு ஒரு சில வாய்ப்பு கிடைக்கும் என்பதனாலே அனுபவ வீரர்களான இவர்கள் இருவருக்கும் ஓய்வு வழங்கியுள்ளோம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

அப்படி அவர்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளதால் புதுமுக வீரர்களை சேர்த்துள்ளதாகவும் அஜித் அகார்கர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் இந்த ஆப்கானிஸ்தான் தொடரை தவிர்த்து வரும் முக்கிய தொடர்களுக்கு அவர்கள் இருவரும் இடம் பிடிப்பார்கள் என்றும் அவர்களுக்கான வாய்ப்பு சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement