ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

IND ODI
- Advertisement -

இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு அடுத்ததாக இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. அந்த வகையில் இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு :

அந்த வகையில் சுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணியும் இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் அணியில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டுமெனில் அவர்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டியது அவசியம் என்று பார்க்கப்பட்ட வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரிலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே போன்ற வீரர்களுக்கும் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி வழக்கமான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியே இந்த தொடரிலும் நீடிக்கிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட – இந்திய அணி அறிவிப்பு

1) சுப்மன் கில், 2) ரோகித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயஸ் ஐயர், 5) கே.எல்.ராகுல், 6) இஷான் கிஷன், 7) ஹர்திக் பாண்ட்யா, 8) நிதிஷ்குமார் ரெட்டி, 9) வாஷிங்டன் சுந்தர், 10) குல்தீப் யாதவ், 11) அர்ஷ்தீப் சிங், 12) பிரசித் கிருஷ்ணா, 13) பிரின்ஸ் யாதவ், 14) குர்னூர் பிரார், 15) ஹர்ஷ் துபே.

Advertisement