IND vs WI : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அவங்களோட சப்போர்ட் தான் காரணம் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி

Yashasvi-Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.

பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் இறுதிவரை களத்தில் நின்ற ஜெயிஸ்வால் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜெயிஸ்வால் 51 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 84 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த போட்டியில் நான் உள்ளே சென்றதும் மகிழ்ச்சியாக என்னுடைய பேட்டிங்கை வெளிப்படுத்த விரும்பினேன். இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்புகளும் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -

அவர்களின் நம்பிக்கையும், ஆதரவும் தான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது. இந்த போட்டியில் நான் விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற திட்டங்களை வைத்திருந்தேன். அதேபோன்று பவர்பிளே ஓவர்களில் நிறைய ரன்களை குவித்தால் போட்டி நமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து அந்த வகையில் பேட்டிங் செய்தேன்.

இதையும் படிங்க : IND vs WI : நாங்க பண்ண இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம். வேற எதுவும் இல்ல – ராவ்மன் பவல் வருத்தம்

சுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மிகச் சிறப்பாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்கிறார். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால் ரன்களை ஓடி எடுக்க முடிகிறது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்வதாக ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement