IND vs WI : அரைசதம் அடிச்சாலும் நான் தப்பு பண்ணிட்டேன். முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு பேசிய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். அதோடு முதல் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Jaiswal-1

- Advertisement -

அதன்படி ட்ரினிடாட் நகரில் நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி நேற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது.

அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளை சந்தித்து ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 57 ரன்கள் குவித்தும் தான் ஆட்டமிழந்த விதம் தவறான ஒன்று என்றும், அது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பேசியுள்ளார்.

Jaiswal

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது அற்புதமாக இருக்கிறது. அவர் ஒரு லெஜன்ட் அவருடன் இணைந்து விளையாடுவதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். அவரைப் போன்ற சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விடயங்கள் என்னுடைய எதிர்காலத்திற்கு பயன்படும் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தான் ஆட்டமிழந்த விதம் குறித்து பேசிய ஜெய்ஸ்வால் கூறுகையில் : நான் ஆட்டமிழந்த விதம் உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் தான். ஆனாலும் இதிலிருந்து நாம் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு இனிவரும் போட்டிகளில் இது போன்ற தவறுகளை சரிசெய்து அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : ஷர்துல் தாகூருக்கு பதிலா முகேஷ் குமாரை அறிமுக வீரராக களமிறக்கியது ஏன்? – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

எப்பொழுது நான் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் என்னால் முடிந்த அளவிற்கு நீண்ட நேரம் விளையாடி பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுகிறேன். இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் அணிக்காக என்னுடைய பங்களிப்பை முடிந்தவரை வழங்கி உள்ளதாக கருதுகிறேன். இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுவதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement