இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் தங்களது அணி பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களமிறங்கி விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 87 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியின் போது இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
இப்படி இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அணிக்குள் வந்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்தும் டாஸ் போட்ட பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். அந்த வகையில் ரோகித் கூறியதாவது :
இதையும் படிங்க : Ashes 2023 : உலக சாம்பியனுக்கு என்னாச்சு – தங்களது ஸ்டைலில் ஆஸி அடித்து நொறுக்கும் இங்கிலாந்து, மாஸ் கம்பேக் நிகழுமா
ஷர்துல் தாகூருக்கு ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாகவே அவரால் இந்த போட்டியில் இடம் பெறமுடியவில்லை. அவருக்கு பதிலாக முகேஷ் குமார் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். ஆகையால் இந்த வாய்ப்பை வழங்குவதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். 29 வயதான முகேஷ் குமார் 39 முதல்தர போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.