- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னுடைய முதல் சம்பளத்தை நான் அப்படியே அவங்க கிட்ட குடுத்துட்டேன் – இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச “>கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 10 அரை சதங்களுடன் 1798 ரன்களை குவித்துள்ளார். 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 723 ரன்களை குவித்துள்ளார்.

என்னுடைய முதல் சம்பளத்தில் இதைத்தான் செய்தேன் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அதுதவிர்த்து அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது அறிமுகமான அவர் 15 ரன்கள் குவித்துள்ளார். இப்படி மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இவர் அறிமுகத்திற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 53 போட்டிகளில் விளையாடி :

- Advertisement -

2 சதம் மற்றும் 9 அரைசதம் என 1607 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த துவக்க வீரராக தற்போது தடம் பதித்து வரும் ஜெய்ஸ்வால் மூன்று வகையான இந்திய அணியிலும் தொடர்ந்து விளையாட தகுதியுடைய வீரர் என்ற பாராட்டினையும் பலரது மத்தியிலும் பெற்று வருகிறார். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பான ஒரு பிரத்தியேக தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு தனது பதிலை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் அந்த நேர்காணலின் போது :

- Advertisement -

ஜெய்ஸ்வாலிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் கொடுத்த பதிலையும் இங்கு காணலாம். முதல் வருமானத்தில் என்ன வாங்கினீர்கள்? – அம்மாவிடம் கொடுத்து விட்டேன். எந்த வீரர் உங்களுடைய விருப்பமான ரூம் மேட்? – குரு ஜுரல். எந்த பவுலருக்கு எதிராக நான்கு பவுண்டரிகளை அடிக்க விரும்புகிறீர்கள்? – மிட்சல் ஸ்டார்க்.

இதையும் படிங்க : 2023 ஃபைனலில் நல்லா விளையாடியும் கழற்றி விட்டாங்க.. இந்தியாவுக்காக இதயத்துடன் வருவேன்.. ரஹானே

நீங்கள் விளையாடியதிலேயே கடினமான பவுலர் யார்? – அப்படி யாருமில்லை. வேறு எந்த வீரரின் ஷாட்டை விளையாட விரும்புகிறீர்கள்? – சச்சின் சார் ஸ்ட்ரைட் டிரைவ் (அவரது இந்த பதில்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -