- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் புதிய முடிவை கையில் எடுத்த ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி நான்கு சதம் மற்றும் பத்து அரைசதம் என 1798 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 23 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 723 ரன்களை குவித்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் எடுத்துள்ள புதிய முடிவு :

அதுமட்டுமின்றி அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக அறிமுக வாய்ப்பையும் பெற்று 15 ரன்கள் குவித்திருந்தார். இப்படி இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் மிகச் சிறப்பான வீரராக இருந்தும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஏனெனில் தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அனைத்து இடங்களுக்கும் சரியான வீரர்கள் திறமையுடன் வரிசை கட்டி நிற்பதால் அவருக்கு ஒருநாள் அணியில் நிரந்தர இடம் கிடைக்க சற்று நேரம் பிடிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக வெளியான சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்திருந்தாலும் இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதற்காக அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெய்ஸ்வால் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் புதிய முடிவு ஒன்றினை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் மும்பை அணி விதர்பா அணியை எதிர்த்து 17-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : அஷ்வின் மாதிரி என்னால் அதை செய்ய முடியும்.. எனக்கு வாய்ப்பு குடுங்க ப்ளீஸ் – ஷர்துல் தாகூர் வேண்டுகோள்

இந்த ரஞ்சி அரையிறுதி போட்டி நாக்பூரில் நடைபெறவுள்ள வேளையில் அந்த போட்டிக்கான மும்பை அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஹானே தலைமையிலான மும்பை அணியில் ஜெய்ஸ்வாலின் பெயரும் அதிகாரவபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதால் நிச்சயம் அரையறுதி போட்டியில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -