அஷ்வின் மாதிரி என்னால் அதை செய்ய முடியும்.. எனக்கு வாய்ப்பு குடுங்க ப்ளீஸ் – ஷர்துல் தாகூர் வேண்டுகோள்

Shardul
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஷர்துல் தாகூர் 30 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதோடு 396 ரன்களையும் விளாசி மும்பை அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதிக்கு செல்ல உதவி புரிந்துள்ளார். இந்த தொடரில் பந்துவீச்சில் அசத்தியதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் என அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அஷ்வின் மாதிரி என்னால் செயல்பட முடியும் : ஷர்துல் தாகூர்

அவரது இந்த செயல்பாட்டின் மூலம் மீண்டும் தேர்வுக்குழுவினரை தன் பக்கம் ஈர்க்க வைத்துள்ளார். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதாகவும் தற்போதைய தனது செயல்பாடு குறித்தும் டெஸ்ட் அணியில் அஸ்வின் இடத்தை தான் நிரப்புவேன் என்றும் ஷர்துல் தாகூர் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : தற்போது என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு ஏதும் சிறப்பு இருக்காது. எனவே நிச்சயம் நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டிய ஊக்கம் அதிகரித்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் பேட்டிங் தெரிந்த ஒரு பந்துவீச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதேபோன்று என்னாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் பேட்டிங்கிலும் என்னால் கை கொடுக்க முடியும்.

- Advertisement -

இந்திய அணியில் மூன்றாவது அல்லது நான்காவது வேகப்பந்து வீச்சாளராக நான் இடம்பிடித்தாலும் யாருக்கும் குறைந்தவன் கிடையாது. ரஞ்சி டிராஃபியிலும் நான் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டிருக்கிறேன். அதேபோன்று புதிய பந்து பழைய பந்து என எந்த பந்திலும் பந்துவீச தயாராக இருக்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது எனது பெயர் இடம்பெறாததில் ஏமாற்றம் இருந்தது.

இதையும் படிங்க : விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்திய பாபர் அசாம்.. ஆம்லா சாதனை சமன் – விவரம் இதோ

ஆனால் தற்போது அதிலிருந்து நான் மீண்டு வந்து விட்டேன். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவே தற்போது முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறேன் என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement