- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை.. சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தல் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ஷிவம் துபே

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜூன் 26-ஆம் தேதியான நாளை முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டிற்கு சென்றடைந்துள்ள இந்திய அணி இந்த போட்டிக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான ஷிவம் துபேவும் இடம் பிடித்துள்ளார்.

ஷிவம் துபே நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் முக்கிய வீரராக இடம் பிடித்திருந்த ஷிவம் துபே அடுத்த 2028 டி20 உலககோப்பை தொடரிலும் விளையாட வேண்டுமெனில் இனிவரும் தொடர்கள் அவருக்கு மிக முக்கியமான தொடர்களாக மாறியுள்ளன.

- Advertisement -

அதன் காரணமாக இந்த அயர்லாந்து தொடரில் அவர் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வேளையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் 9 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஷிவம் துபே நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான ஷிவம் துபே இதுவரை 64 டி20 போட்டிகளில் விளையாடி 991 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 4 சிக்ஸர் மட்டுமே தேவை.. 5 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்த – காத்திருக்கும் சாதனை

அதனால் இன்னும் அவர் 9 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 15 வீரர்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள வேளையில் இந்த சாதனையை நிகழ்த்தும் 16-வது இந்திய வீரராக ஷிவம் துபே இந்த பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -