இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 46 டி20 போட்டிகளில் விளையாடி 33 ரன்கள் சராசரியுடன் 2 சதம் மற்றும் 10 அரைசதம் என 1438 ரன்கள் குவித்துள்ளார். அதோடு ஐ.பி.எல் போட்டிகளிலும் 92 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடி உள்ளார்.
5 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
டி20 போட்டிகளை பொருத்தவரை முதன்மை துவக்க வீரராக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறார். இந்நிலையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் ஐந்தாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்து 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 46 போட்டிகளில் விளையாடி 96 சிக்ஸர்களை விளாசியுள்ளார் .இந்நிலையில் இந்த அயர்லாந்து தொடரில் அவர் மேலும் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்வார்.
அப்படி அவர் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்யும் போது ஐந்தாவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்களை அடித்த வீரராக இடம் பிடிப்பார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
இதையும் படிங்க : 37 ஆண்டுகால சாதனை நாளை முறியடிக்கப்படுமா? வைபவ் சூர்யவன்ஷி விடயத்தில் – நடக்கப்போவது என்ன?
இவ்வேளையில் அந்த பட்டியலில் ஐந்தாவது வீரராக அபிஷேக் ஷர்மா இணைய அற்புதமான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு குறைந்த போட்டிகளில் 100 சிக்ஸர்களை டி20 போட்டிகளில் அடித்த இந்திய வீரராக சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



