37 ஆண்டுகால சாதனை நாளை முறியடிக்கப்படுமா? வைபவ் சூர்யவன்ஷி விடயத்தில் – நடக்கப்போவது என்ன?

Vaibhav Sooryavanshi
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜூன் 26 ஆம் தேதியான நாளை துவங்கி நடைபெற உள்ளது. இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் 15 வயதே ஆன இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார்.

37 ஆண்டுகால சாதனையை உடைப்பாரா வைபவ் சூர்யவன்ஷி ? :

இதன் காரணமாக அவருக்கு முதன்மை இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதலாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானால் சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனை ஒன்றினை முறியடிப்பார். அது நடக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

அந்த வகையில் வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கரின் வசம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமானார்.

- Advertisement -

இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது ரொம்ப தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் சாடல்

அப்போது அவருடைய வயது 16 வயது 25 நாட்கள். ஒருவேளை நாளைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமாகும் பட்சத்தில் 15 ஆண்டுகள் 91 நாட்களுடன் சச்சின் சாதனையை அவர் முறியடித்து புதிய வரலாற்று சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement