10 வருடத்தில் சச்சின் செஞ்சதை ஜெய்ஸ்வால்.. ஒரே வருடத்தில் ஈஸியா செஞ்சுட்டாரு.. முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

Sachin Jaiswal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் அந்த அணியை வீழ்த்தும் முனைப்புடன் விளையாடும் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ரீகன் அகமது, சோயப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

சேவாக் மாதிரி:
அதனால் இந்த போட்டியில் இந்தியா 143 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான துவக்கத்தை பெற்றது. முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் பும்ரா வரை மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே 35 ரன்கள் கூட தாண்டமல் அனைவரும் சேர்ந்து வெறும் 185 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

ஆனால் அதே இங்கிலாந்துக்கு எதிராக அதே பிட்ச்சில் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார். குறிப்பாக ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்கவர்களை விட வெறும் 22 வயதாகும் அவர் 5 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தும் தன்னுடைய முதல் இரட்டை சதமடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க நீண்ட வருடங்கள் எடுத்துக் கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் கடந்த வருடம் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்த வருடம் இரட்டை சதமடித்துள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் வான்கடே மைதானத்தில் இரவு நேரத்தில் ஜாம்பவான் வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டல்களைப் பார்த்தவர். அதை அவரும் கேட்க விரும்பினார். நாளடைவில் அதே மைதானத்தில் ஐபிஎல் தொடரில் சதமடித்த அவர் அந்த கைதட்டல்களை பெற்றதை நாம் பார்த்தோம்”

இதையும் படிங்க: 8வது முறையாக ஏமாற்றிய ரோஹித்.. 18 இன்னிங்ஸ் கழித்து அதிர்ஷ்டத்துடன் மூச்சுவிட்ட கில்.. போராடும் இந்தியா

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் தற்போது இரட்டை சதமும் அடித்துள்ளார். பொதுவாக அனைவராலும் இரட்டை சதத்தை அடிக்கடி அடிக்க முடியாது. சச்சின் பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் தன்னுடைய கேரியரின் ஆரம்பத்திலேயே அடித்துள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 1989இல் அறிமுகமான சச்சின் 10 வருடங்கள் கழித்து 1999இல் தான் இரட்டை சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement