21 வயதிலேயே ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய ஜெய்ஸ்வால் – 15 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

Yashasvi-Jaiswal
- Advertisement -

தர்மசாலா நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66-ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் 15 ஆண்டு காலமாக நீடித்து வந்த ஒரு சாதனையை முறியடித்து வரலாற்றில் ஐ.பி.எல் தனது பெயரை பதித்துள்ளார்.

Jaiswal 1

- Advertisement -

அந்த வகையில் நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்களை குவிக்க பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலேயே பட்லரின் விக்கெட்டை இழந்தாலும் ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல நிலையை எட்டியது.

பின்னர் களத்திற்கு வந்த அனைவருமே கைகொடுக்க இறுதியில் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

Jaiswal

அவர் அடித்த இந்த 50 ரன்கள் மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் சேர்த்துள்ளார். அதோடு இந்த தொடரில் அவரது சராசரி 48.07 ஆகவும் ஸ்ட்ரைக் ரெட் 163.63 ஆகவும் இருக்கிறது. அதோடு இந்த தொடரில் மட்டும் அவர் ஐந்து அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகாமல் “அன் கேப்புடு பிளேயராக” (UnCapped Player) ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஷேன் மார்ஷ் இதுவரை இருந்து வந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் விளையாடி 616 ரன்களை குவித்து அன் கேப்புடு பிளேயராக ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக தனது பெயரை பதித்திருந்தார்.

இதையும் படிங்க : RR vs PBKS : 100 டி20 மேட்ச் ஆடுனவங்க மாதிரி அந்த பையன் நல்ல மெச்சூரிட்டியா ஆடுறான். வெற்றிக்கு பிறகு – சாம்சன் புகழாரம்

அவரது இந்த சாதனையே 15 ஆண்டு காலமாக நீடித்து வந்த வேளையில் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த அன் கேப்புடு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement