- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்கு பதிலடியாக கோன்ஸ்டஸை வேணும்னே அடிச்சேன்.. ரோஹித் பாய் அமைதிப்படுத்துனாரு.. ஜெய்ஸ்வால் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் யசஸ்வி ஜெய்ஸ்வால் 2023இல் அறிமுகமானார். அப்போதிலிருந்தே ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடுகிறார் என்றே சொல்லலாம். வெஸ்ட் இண்டீஸில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரட்டை சதமடித்து 700+ ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அப்படியே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் அத்தொடர் முழுவதுமே இந்தியாவின் வெற்றிக்காகப் போராடினார். அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் 2 சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தொடரை சமன் செய்தார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தார்.

- Advertisement -

வேணும்னே அடிச்சேன்:

அப்போது ஒரு தருணத்தில் சாம் கோன்ஸ்டஸ் ஷார்ட் லெக் பகுதியில் நின்றுகொண்டு அவரிடம் தொடர்ச்சியாக வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார். அதனால் பொறுமையிழந்த ஜெய்ஸ்வால் அடுத்தப் பந்தை அவரது உடம்பில் அடித்து தக்க பதிலடிக் கொடுத்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் கோன்ஸ்டஸ் அளவுக்கு அதிகமாக தம்மை திருப்பி ஸ்லெட்ஜிங் செய்ததாலேயே வேண்டுமென்றே பந்தால் அடித்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலைகளை சமாளிக்க ரோஹித் உதவியது பற்றியும் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிட்னி போட்டியில் கோன்ஸ்டஸ் பேட்டிங் செய்த போது “என்னவாயிற்று உங்களுக்கு, எந்த ஷாட்டையும் அடிக்கவில்லை? ஹேய் கோன்ஸ்டஸ் உங்களால் இனிமேலும் அடிக்க முடியாதா?” என்று கேட்டேன். அதற்கு பதிலடியாக நான் பேட்டிங் செய்த போது அவர் எனக்கு திருப்பிக் கொடுத்தார்”

- Advertisement -

உதவிய ரோஹித்:

“கோன்ஸ்டஸ் கொஞ்சம் வித்தியாசமானவர். நான் பேட்டிங் செய்யும் போது அவர் வலுக்கட்டாயமாக என்னிடம் சில விஷயங்களை சொன்னார். அதனால் கொஞ்சம் கோபமடைந்த நான் “ஓகே” என்று அவரிடம் சொன்னேன். அப்போது நேதன் லயன் வீசிய பந்தை நான் இழுத்து அடித்தேன். அன்று அவரை வேண்டுமென்றே நான் அடித்தேன். பின்னர் நான் சில்லி பாய்ண்ட் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க: சாம்சன் சுயநலத்துக்காக விளையாடல.. அதுக்கு தயாரான அவரிடம் எல்லாத் திறமையும் இருக்கு.. கவாஸ்கர் ஆதரவு

“அப்போது ஸ்டீவ் ஸ்மித் தம்முடைய பேட்டை உயர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் “பாப் ரே” என்று சொன்னேன். அந்த பிட்ச் மிகவும் ஃபிளாட்டாக இருந்தது. அந்த பரபரப்பான தருணங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பாய் எனக்கு மூங்கில் குச்சியில் அடிப்பது போல் ரோஹித் சொல்லிக் கொடுத்தார். ரோஹித்தை சுற்றி விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். அவர் சொல்லும் விஷயங்களில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர் நமக்கு நல்லதையே சொல்வார். அவருடைய வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தன” என்று கூறினார்.

- Advertisement -