சீனியருடன் சண்டை? வாழ்க்கை கொடுத்த மும்பையை விட்டு கோவா அணிக்கு செல்வது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூரில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அந்த அணியிலிருந்து விலகி அவர் கோவா அணிக்காக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் மும்பை அணி வெற்றிகளில் பங்காற்றினார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் அசத்திய அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள ஜெய்ஸ்வால் டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பை அணியிலிருந்து அவர் விலகுவதாக வந்த செய்திகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

வெளியேறும் ஜெய்ஸ்வால்:

மேலும் சீனியர் வீரருடன் ஏற்பட்ட சண்டையை அதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராகப் போட்டியில் 14 வருடங்கள் கழித்து மும்பை தோற்றது. அந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் பொறுப்பில்லாமல் மோசமான ஷாட்டை அடித்த ஜெய்ஸ்வால் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அது தோல்விக்கு காரணமானதால் அவருடைய ஆட்டம் பற்றி மும்பை அணியின் சீனியர் வீரர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அதற்கு அதே போட்டியின் முதல் இன்னிங்ஸில் தம்மை விட மோசமான ஷாட்டை அடித்த உங்களுடைய ஆட்டத்தை யார் கேள்வி கேட்பார்கள்? என்று ஜெய்ஸ்வால் எதிர்த்து பேசியதாக தெரிகிறது. அதனால் மும்பை அணி நிர்வாகம் மற்றும் அந்த சீனியர் வீரர் ஜெய்ஸ்வால் மீது அதிருப்தியில் உள்ளனர். அதனாலேயே தொடர்ந்து மும்பையில் விளையாட விரும்பாத ஜெய்ஸ்வால் அந்த அணியிலிருந்து வெளியேற முடிவு எடுத்ததாக பிடிஐ இணையத்தில் செய்தி வெளியானது.

- Advertisement -

கோவா கேப்டன்:

இந்நிலையில் கோவா அணியில் தமக்கு கேப்டன்ஷிப் பொறுப்புடன் அழைப்பு வந்ததால் மும்பையிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அதே சமயம் சீனியர் வீரருடன் சண்டை என்ற செய்திகள் பற்றி வாய் திறக்காத ஜெய்ஸ்வால் இது குறித்து பேசியது பின்வருமாறு. “எனக்கு இது மிகவும் கடினமான முடிவு. ஏனெனில் இன்று நான் இருக்கும் அனைத்து நல்ல நிலைமைக்கு மும்பை அணியே காரணம்”

இதையும் படிங்க: கோடி கோடியா பணம் கொடுத்தாலும் என்னோட வேலை இதுமட்டும் தான்.. புரிஞ்சிக்கோங்க – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

“இந்த நகரம் இன்று நான் கொண்டிருக்கும் வாழ்க்கை மற்றும் நிலைமையைப் பெற்றுக் கொடுத்தது. அதற்குக் காரணமான மும்பை வாரியத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதே சமயம் கோவா தலைமைப் பொறுப்புடன் எனக்குப் புதிய வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்தியாவுக்காக விளையாடுவதே எனது முதல் இலக்கு. நாட்டுக்காக விளையாடாத நேரத்தில் கோவாவுக்காக விளையாடி அவர்களை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பேன். எனது வழியில் வந்துள்ள இந்த முக்கியமான வாய்ப்பை நான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement