கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது நடப்பு சாம்பியனாக 2025 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணியானது இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வெற்றி பெற்றது. அதேவேளையில் மூன்றாவதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது.
கே.கே.ஆர் அணியில் என்னோட வேலை இதுதான் : வெங்கடேஷ் ஐயர்
அதனை தொடர்ந்து நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று தற்போது இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் பெரியளவு ரன் குவிக்காததே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பேசப்பட்டது.
ஏனெனில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா அணி அவரை 23 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைத்தது. இப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர் பெரியளவில் சோபிக்காமல் போனது அந்த அணியின் சரிவுக்கு காரணமாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 29 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 60 ரன்கள் குவித்து மீண்டும் தனது சிறப்பான பார்மை வெளிக்காட்டிய வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். இந்நிலையில் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டால் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற அர்த்தத்தை அர்த்தம் இல்லை என்றும் தன்னுடைய வேலை என்ன என்பது குறித்தும் வெங்கடேஷ் ஐயர் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தாலும் சரி, 20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தாலும் சரி அணியின் வெற்றிக்காக மட்டுமே நான் விளையாட விரும்புகிறேன். இதை பலமுறை சொல்லிவிட்டேன். எங்களது அணியில் சிறப்பான வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவருமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது எனது வேலை போட்டியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
இதையும் படிங்க : ஹாட்ரிக் தோல்வி 10வது இடம்.. சுமாரான பேட்டிங் இல்ல.. கொல்கத்தாவிடம் தோற்க இதான் காரணம்.. கேப்டன் கமின்ஸ்
அதை தவிர்த்து பெரியளவில் பணம் கொடுக்கப்படுவதற்காக அதனை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடுவது கிடையாது. ஒரு அணியின் வீரராக நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய வேலை. அதிக சம்பளம் வாங்கும் நபராக இருப்பதால் எப்போதும் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. பெரிய தொகையால் எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



