கடந்த 9 மாதத்தில் என்னோட பேட்டிங் முன்னேற அவங்க 2 பேர் தான் காரணம்.. ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal 24
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரில் 22 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார். 5 போட்டிகளில் 712 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த போது 2வது போட்டியில் தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்த அவர் 3வது போட்டியில் 12 சிக்ஸர்களுடன் 214* ரன்கள் விளாசி இந்தியா கம்பேக் கொடுக்க உதவினார். அந்த வகையில் 80, 209, 214*, 73, 57 என களமிறங்கிய 5 போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடித்த அவர் 75 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரின் 5 போட்டியிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

- Advertisement -

பேட்டிங்கில் முன்னேற்றம்:
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில், ஒரு போட்டியில், ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்தார். அந்த வகையில் அறிமுகமானதிலிருந்தே அசத்தும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றி வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கடந்த 9 மாதங்களில் தம்முடைய ஆட்டத்தில் முன்னேறுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் முக்கிய காரணமாக இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உடைமாற்றும் அறையில் ரோஹித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவருக்கு கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது”

- Advertisement -

“இந்த தொடரில் நான் வெளியிட விரும்பாத பல தருணங்கள் இருந்தன. அது என்னுடன் இருக்கட்டும். இந்த பயணம் முழுவதும் வீரர்களை ரோகித் சர்மா ஆதரித்து பேசும் விதம் பேட்டிங் செய்யும் விதம் சிறப்பாக இருந்தது. என்ன நடந்தாலும் அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் கேப்டனிடம் இதை பார்ப்பது நம்ப முடியாதது. அவரிடமிருந்து நானும் கற்று வருகிறேன்”

இதையும் படிங்க: 23/3 என சரித்த.. இலங்கையை பதிலுக்கு அடித்த கேப்டன்.. வங்கதேசம் பதிலடி கொடுத்தது எப்படி?

“அதே சமயம் இந்திய அணியில் கடந்த 9 மாதங்களாக விளையாடி வரும் நான் ராகுல் டிராவிட் சார் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் நிறைய பேசினேன். அது என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு நிறைய உதவியது. குறிப்பாக போட்டியை புரிந்து கொள்வது, நீண்ட நேரங்கள் நின்று விளையாடுவது, எப்படி என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் அடிப்பது என்பதை உறுதி செய்து கொள்வதில் அது உதவியது” என்று கூறினார்.

Advertisement