23/3 என சரித்த.. இலங்கையை பதிலுக்கு அடித்த கேப்டன்.. வங்கதேசம் பதிலடி கொடுத்தது எப்படி?

SL vs BAN 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை முதலாவதாக நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அந்த நிலையில் இவ்விரு அணிகள் முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 13ஆம் தேதி துவங்கியது. சட்டோகிராம் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு சமரவிக்ரமா 3, அசலங்கா 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஜனித் லியாங்கே 67, கேப்டன் குஷால் மெண்டிஸ் 59, பதும் நிசாங்கா 36, அவிஸ்கா பெர்னான்டோ 33 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

வங்கதேசத்தின் பதிலடி:
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, டன்சித் ஹசன் சாகிப் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர் அதைத் தொடர்ந்து 256 ரன்கள் துரத்திய வங்கதேசத்திற்கு முதல் பந்திலேயே லிட்டன் தாஸை கோல்டன் டக் அவுட்டாக்கிய மதுசங்கா தன்னுடைய அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் சௌமியா சர்க்காரை 3 (9) ரன்களில் காலி செய்தார்.

அப்போது வந்த தௌஹீத் ஹ்ரிடாய் 3 ரன்களில் அவுட்டானதால் 23/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வங்கதேசத்தின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் சாந்தோ நிதானமாக விளையாடினார். அப்போது வந்து முகமதுல்லா நான்காவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாட முயற்சித்த போது 37 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் முஸ்பிக்கர் ரஹீம் தன்னுடைய அனுபவத்தைக் காட்டி இலங்கை பவுலர்களுக்கு சவாலை கொடுத்தார். அதை பயன்படுத்தி எதிர்புறம் சற்று அதிரடியாக விளையாடிய கேப்டன் சாந்தோ அரை சதமடித்தார். அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு சேர்ந்து இலங்கை பவுலர்களை நங்கூரமாக எதிர்கொண்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

இதையும் படிங்க: ரஞ்சி பைனல்ல நேர்ல பாக்க போனது ஒரு குத்தமா? சிக்கலில் சிக்கிய கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடியில் சாந்தோ சதமடித்து 13 பவுண்டரி 2 சிக்சருடன் 122* (129) ரன்களும் ரஹீம் 73* (84) ரன்களும் எடுத்தனர். அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் 44.4 ஓவரில் 257/4 ரன்கள் எடுத்த வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசாங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மேலும் டி20 தொடரில் தோல்வியை கொடுத்த இலங்கைக்கு பதிலடி கொடுத்துள்ள வங்கதேசம் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement