இங்கிலாந்துக்கு பிரச்சனையே அவர் தான்.. இந்திய வீரரை வெறுப்புடன் பாராட்டிய மைக்கேல் வாகன்

Micheal Vaughan 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்ந்து விட மாட்டோம் என்பதை நிரூபித்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்ற எச்சரிக்கையுடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது. அது போன்ற சூழ்நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா போன்ற நிறைய வீரர்கள் சொதப்பலாக செயல்படும் நிலையில் அஸ்வின் போன்ற கணிசமான வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இங்கிலாந்தின் பிரச்சனை:
அதில் 2வது போட்டியில் ஃபிளாட்டான பிட்ச்சில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அவரை விட முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை எஞ்சிய 10 வீரர்கள் 35 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தனி ஒருவனாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வேற லெவல் சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார். இத்தனைக்கும் வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி 80 (76) ரன்கள் குவித்த நிலையில் 2வது போட்டியிலும் இங்கிலாந்துக்கு பெரிய தொல்லையாக அமைந்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

இந்நிலையில் வெறும் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து வருவதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெறுப்புடன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அவர் தான் இங்கிலாந்துக்கு பிரச்சனை. உண்மையாகவே அவர் இத்தொடரில் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறார்”

இதையும் படிங்க: அந்த இடத்துல இருந்தா மட்டும் மரியாதையும், விஸ்வாசமும் கிடைக்காது.. தல தோனியின் லேட்டஸ்ட் பேட்டி

“அதே சமயம் அவர் நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடுகிறார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது. அதில் விராட் கோலி போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement