
பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது.
அப்போது அபாரமாக பந்து வீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்ட உதவினார். பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 161 ரன்கள் குவித்தார். அவருடன் விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபாரமான வெற்றி பெற்றது.
மேலும் ஆஸ்திரேலியாவில் விளையாடிய தனது அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். இந்நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியாக இருந்திருந்தால் பவுன்சர்களை வீசி இவ்வளவு ரன்கள் அடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் அதை சரியாக செய்யாத பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை நொறுக்கிய ஜெய்ஸ்வால் தற்சமயத்தில் உலகிலேயே சிறந்த இளம் வீரராக திகழ்வதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர். முதல் இன்னிங்ஸில் தோல்வியுற்ற அவர் பின்னர் தற்காப்புடன் விளையாடி 161 ரன்கள் எடுத்தார்”
“அதே சமயம் ஆஸ்திரேலியா அவருக்கு எதிராக செயல்படவில்லை என்பதில் நான் திகைத்துப் போனேன். இளம் வீரரான அவரை நீங்கள் தோளில் அடிக்கலாம். ஃபீல்டர்களை நெருக்கி 40 – 50 நிமிடங்கள் வைத்து அட்டாக் செய்திருக்கலாம். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு இளம் வீரர் விளையாட வந்தால் 20 நிமிடங்கள் விடுவார்கள்”
இதையும் படிங்க: 12 நிமிடத்தில் கங்குலி இந்த மெசேஜ் பண்ணாரு.. இப்போவும் சொல்றேன் இந்தியா தோற்கும்.. மைக்கேல் வாகன்
“பின்னர் பிரட் லீ, கில்லஸ்ப்பி ஆகியோர் சரி இவரை தாக்கலாம் என்ற வகையில் பந்து வீசுவார்கள். ஸ்டீவ் வாக் தாமாக சென்று சில பவுன்சர்களை வீசுவார். ஆனால் அதை ஆஸ்திரேலியா இம்முறை செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் அவர்களுக்கு எதிராக இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக செயல்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து 2வது போட்டி இளஞ்சிவப்பு நிற பந்தில் அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.