8 போட்டியிலேயே புதிய உச்சம்.. ரோஹித் சர்மாவை முந்தி விராட் கோலிக்கு டஃப் கொடுக்கும் ஜெய்ஸ்வால்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரை முதல் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. அதனால் 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் முன்னேறியுள்ளது.

இந்த தொடரில் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 655* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் அடித்த அவர் 3வது போட்டியில் 214* ரன்கள் அடித்து இந்தியா கம்பேக் கொடுக்க உதவினார்.

- Advertisement -

8 போட்டியிலேயே:
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையும் சமன் செய்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டிக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் ராஞ்சியில் நடந்த 4வது போட்டியில் 73, 37 ரன்கள் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி கேரியரில் முதல் முறையாக டாப் 10 இடங்களுக்குள் நுழைந்து 10வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சொல்லப்போனால் கடந்த வருடம் அறிமுகமான அவர் இதுவரை வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அதற்குள் 917 ரன்களை 69.36 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளதால் 8 போட்டியிலேயே ரோகித் சர்மாவை (11வது இடம்) பின்னுக்கு தள்ளியுள்ள ஜெய்ஸ்வால் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

- Advertisement -

அந்த டாப் 10 பட்டியலில் விராட் கோலி தற்போது 8வது இடத்தில் இருக்கிறார். ஒருவேளை 5வது போட்டியிலும் பெரிய ரன்கள் குவிக்கும் பட்சத்தில் கூடுதல் புள்ளிகளைப் பெற்று விராட் கோலியையே முந்தி ஜெய்ஸ்வால் டஃப் கொடுப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மற்றபடி டாப் 10 பவுலர்கள் பட்டியலில் பும்ரா 1, அஸ்வின் 2, ஜடேஜா 7வது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கவலைப்பட்டாலும் இதான் எங்க ஸ்டைல்.. இதுல தனி திருப்தி இருக்கு.. கேப்டன் ரோஹித் பேட்டி

அதே போல டாப் 10 ஆல் ரண்டர்கள் பிரிவில் ஜடேஜா 1, அக்சர் படேல் 5வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். அணிகள் தரவரிசையில் தொடர்ந்து இந்தியா 2வது இடத்தில் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement