IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சிய சாதனையுடன் அடியெடுத்து வைத்து – அறிமுகமாகிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal-and-Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி இன்று டோமினிக்கா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

IND vs WI

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அறிமுக வீரர்களாக துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனும் களமிறங்கினர். யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனுக்கு அனுபவ வீரர் விராட் கோலியும் அறிமுக தொப்பியை வழங்கி கௌரவித்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சின் டெண்டுல்கரை முந்தி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jaiswal Debue

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அதிக சராசரியுடன் இந்திய அணிக்காக அறிமுகமாகிய வீரர் என்ற பட்டியலில் சச்சினை முந்தி மூன்றாவது இடத்திதினை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்க இல்லாம நான் எப்டி ஜெயிக்க முடியும்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி பற்றி – ரோஹித் சோகமான பேட்டி

இந்த வரிசையில் அதிக சராசரியை வைத்து களமிறங்கிய வீரராக வினோத் காம்ப்ளி 88.37 – (27 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பிரவீன் ஆம்ரே 81.23 (23 போட்டிகள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 80.21 (15 போட்டிகள்) தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவர்களுக்கு அடுத்து ருசி மோடி 71.28 (38 போட்டிகள்), சச்சின் டெண்டுல்கர் 70.18 (9 போட்டிகள்) மற்றும் சுப்மன் கில் 68.78 (23 போட்டிகள்) ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement