லாரா போல தனியாளாக 209 ரன்ஸ்.. சேவாக்கின் 20 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. புதிய சாதனை

Yashasvi Jaiswal 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. எனவே விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிடார் 32 ரன்களில் அவுட்டாகி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் அந்த பின்னடைவை எதிர்புறம் சரி செய்த ஜெய்ஸ்வால் சதமடித்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

மாபெரும் சாதனை:
ஆனால் மீண்டும் எதிர்புறத்தில் அக்சர் பட்டேல் 27, கேஎஸ் பரத் 17, அஸ்வின் 20, பும்ரா 6 முகேஷ் குமார் 0 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் அதனால் ஏற்பட்ட அழுத்தம் இந்தியாவை பாதிக்காத அளவுக்கு மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி 7 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 209 (290) ரன்கள் குவித்தார். அவருடைய அட்டகாசமான ஆட்டத்தால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ரெஹன் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அந்த வகையில் இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட இதர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 185 ரன்கள் அடித்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் மட்டும் 209 ரன்கள் அடித்து இந்தியாவை காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அதை விட ரோகித் முதல் பும்ரா வரை வேறு எந்த இந்திய வீரர்களும் 50 ரன்கள் கூட அடிக்கவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஆளாக 209 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 50 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் 20 வருட சாதனையை உடைத்து மாபெரும் வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 209, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. விரேந்தர் சேவாக் : 195, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2003
3. வினோத் மன்கட் : 184, இங்கிலாந்துக்கு எதிராக, 1952

இதையும் படிங்க: திடீரென வந்த அவசர செய்தி.. கமெண்ட்ரியில் இருந்து பாதியில் வெளியேறிய கவாஸ்கர் – என்ன நடந்தது?

அத்துடன் உலக அளவில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட தாண்டாத போது இரட்டை சதமடித்த 2வது வீரர் என்ற வரலாற்றையும் ஜெயிஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2005இல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜாம்பவான் பிரைன் லாராவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 35 ரன்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக 226 ரன்கள் குவித்தார்.

Advertisement