வீடியோ : அன்று பானி பூரி விற்ற மும்பையில் இன்று சரித்திரம் படைத்த ஜெய்ஸ்வால் – நெகிழ்ச்சியான பின்னணி, சாதனைகள் இதோ

Advertisement

இளம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெறும் இடமாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ராஜஸ்தான் தோற்றாலும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த ஊரில் அடித்து நொறுக்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 16 பவுண்டரி 8 சிக்ஸருடன் 124 (62) ரன்களை 200.00 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரும் பாராட்டுகளை அள்ளினார். குறிப்பாக ஜோஸ் பட்லர் 18, கேப்டன் சஞ்சு சாம்சன் 14, ஹெட்மயர் 8 என இதர ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மட்டும் தனி ஒருவனாக மும்பை பவுலர்களை பந்தாடி 20 ஓவரில் 212/7 ரன்கள் குவித்த உதவினார்.

Jaiswal

இருப்பினும் கேமரூன் கிரீன் 44, சூரியகுமார் யாதவ் 55, திலக் வர்மா 29*, டிம் டேவிட் 45* என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை எடுத்ததால் மும்பை வென்றாலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 428* ரன்களை விளாசி 42வது போட்டியின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் படித்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார்.

- Advertisement -

பானிபூரி விற்ற ஹீரோ:
உத்திரபிரதேச மாநிலத்தில் சாதாரண பானிபூரி விற்கும் நபருக்கு மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்த ஜெய்ஸ்வால் 2019இல் மும்பைக்காக உள்ளூர் போட்டிகளில் அறிமுகமானார். குறிப்பாக தமது தந்தையுடன் பானிபூரி விற்பதற்காக மும்பைக்கு வந்த அவர் அங்கு உள்ளூர் அளவில் விளையாடி அசத்தியதால் மும்பை அணிக்காக அறிமுகமாகி 15 போட்டிகளில் 1845 ரன்களை விளாசினார். மேலும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் 400 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதனால் ராஜஸ்தான் அணிக்காக 2.40 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் 2020, 2021, 2022, 2023 சீசன்களில் முறையே 40, 249, 258, 428* என ஒவ்வொரு வருடமும் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்ப காலங்களில் மும்பையில் சாதாரண குடிசையில் தங்கி வந்த அவர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் இல்லாமல் அசார் மைதானத்திற்கு வெளியே பானிபூரி விற்றார்.

- Advertisement -

அந்த காலங்களில் மழை பெய்தால் ஒழுகக் கூடிய குடிசையில் இருந்து கொண்டு பானிபூரி விற்ற போது அந்த மைதானத்திற்கு விளையாட வந்த சக இளைஞர் ஒருவர் உதவியுடன் கிரிக்கெட்டில் விளையாட துவங்கி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்று இந்தளவுக்கு வளர்ந்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் ஜெய்ஸ்வால் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அப்படி அடிமட்டத்திலிருந்து இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டிய அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். அந்த பாராட்டுக்கு மத்தியில் இந்த போட்டியில் அவர் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் 1000வது ஐபிஎல் போட்டியாக நடைபெற்ற அந்தப் போட்டியில் சதமடித்த வீரராக காலத்திற்கும் அழியாத பெயரை ஜெயஸ்வால் பதித்துள்ளார். குறிப்பாக 2008இல் ஐபிஎல் துவங்கிய போது வரலாற்றின் முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் 158* ரன்கள் அடுத்தது மறக்க முடியாததை போல் இவருடைய சதமும் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

2. அதை விட ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 124, மும்பைக்கு எதிராக, 2023
2. பால் வல்தாட்டி : 120*, சென்னைக்கு எதிராக, 2011
3. ஷான் மார்ஷ் : 115, ராஜஸ்தானுக்கு எதிராக, 2008

இதையும் படிங்க:IPL 2023 : மாஸ்டர் பிளான் – டேவிட் வில்லிக்கு பதிலாக ரஹானேவுக்கு போட்டியாக சீனியர் இந்திய வீரரை வாங்கிய ஆர்சிபி

3. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதமடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அதுபோக ஐபிஎல் வரலாற்றில் பவுண்டரிகளால் மட்டுமே ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 112
2. ரிஷப் பண்ட் : 102
3. கேஎல் ராகுல்/முரளி விஜய் : 98

Advertisement