ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ரோஹித்தை முந்திய ஜெய்ஸ்வால்.. வேகமாக முன்னேறும் துருவ் ஜுரேல், குல்தீப் யாதவ்

ICC Rankings.jpeg
- Advertisement -

ந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி 3 – 1* என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்த தொடரில் விராட் கோலி, கே.எல். ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆனால் அவர்கள் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அவர்களுடன் அறிமுகமாக களமிறங்கிய சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகியோரும் தங்களுடைய திறமையை காண்பித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

ஐசிசி தரவரிசை:
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து 9வது இடத்தில் நீடிக்கிறார். இந்த தொடரில் ரோகித் சர்மா போன்ற மற்ற பேட்ஸ்மேன்களை விட 22 வயதிலேயே 655* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

குறிப்பாக 4வது போட்டியில் 73, 37 ரன்கள் எடுத்ததால் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ள அவர் தற்போது கேப்டன் ரோஹித் சர்மாவை முந்தி 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, ரிசப் பண்ட் ஆகியோர் 13 மற்றும் 14 இடங்களில் உள்ள நிலையில் சுப்மன் கில் 31வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் அறிமுகமான துருவ் ஜுரேல் 4வது போட்டியில் முக்கிய நேரத்தில் 90, 39* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அதனால் தன்னுடைய கேரியரின் 2வது போட்டியிலேயே வேகமாக டாப் 100 பட்டியலுக்குள் நுழைந்துள்ள அவர் 69வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே போல டாப் 10 பவுலர்களுக்கான ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் 2 இடங்களில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கின்றனர். அவர்களை தவிர்த்து ரவீந்திர ஜடேஜா 6வது இடத்தில் இருக்கும் நிலையில் ராஞ்சி போட்டியில் அசத்திய குல்தீப் யாதவ் 33வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: இதுக்கு பேர் தான் ஆணவன்னு சொல்வாங்க.. நட்சத்திர வீரரை விளாசிய ஜெஃப்ரி பாய்காட்.. காரணம் என்ன?

டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்தையும் அக்சர் பட்டேல் 4வது இடத்தையும் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். டாப் 10 அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் நிலையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Advertisement