இதுக்கு பேர் தான் ஆணவன்னு சொல்வாங்க.. நட்சத்திர வீரரை விளாசிய ஜெஃப்ரி பாய்காட்.. காரணம் என்ன?

Geoferry Boycott 3
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே எச்சரித்தது. அதை முதல் போட்டியில் செய்த அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சுதாரித்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்து 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது.

மறுபுறம் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல விளையாடாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று ஒற்றைக்காலில் நின்ற இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்த தொடரில் ஏற்கனவே 11000 ரன்கள் அடித்த அனுபவமிக்க ஜோ ரூட் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி விளையாடுகிறேன் என்ற பெயரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டை பரிசளித்தது இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

ரூட்டிம் ஆணவம்:
அதனால் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று நிறைய கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து 4வது போட்டியில் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து 122* ரன்கள் விளாசினார். இருப்பினும் அப்போட்டியில் 96 ரன்களில் இருந்த போது ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கலாம் என்று நினைத்ததாக தெரிவித்த ரூட் ராஞ்சி பிட்ச் கடினமாக இருந்ததால் வேண்டாமென விட்டு விட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் அந்த எண்ணதுக்கு பெயர் தான் ஆணவம் என்று ஜோ ரூட்டை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக விமர்சிய்துள்ளார். இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஜோ ரூட்டை பாருங்கள். அவர் பழைய ரூட்டை போல் விளையாடிய போது அவுட்டாவதற்கு விருப்பமின்றி அற்புதமான சதமடித்தார். ஆனால் அதன் பின் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிப்பீர்களா என்று கேட்ட போது அவர் அடிப்பேன் என்று சொன்னார்”

- Advertisement -

“இது தான் நான் சொல்லும் ஆணவமாகும். ஏனெனில் அவர் இப்போது தான் ஒரு இனிமையான சதம் அடித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் அவர் மீண்டும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பதை பற்றி பேச வேண்டும்? ஏனெனில் நீங்கள் ஒரு புத்திசாலித்தனமான ஆட்டத்தை பார்க்க விரும்புகிறீர்கள். அவர் அடிப்படையான ஆட்டத்தை பின்பற்றி விளையாடியது அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: ஒரு ரசிகனா யார் வீட்டுக்கு முன்னாடி நிக்குறேன் தெரியுமா? இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா ஆனந்தம்

“அதுவே அனைத்தையும் சொல்கிறது. கிரிக்கெட்டின் அடிப்படைகள் 200 வருடங்களாக இருக்கிறது. அது எப்போதும் தவறாகாது. ஐபிஎல் தொடரில் விளையாடும் சிலர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்ததால் கிரிக்கெட்டை மீண்டும் கண்டுபிடித்ததாக நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கிரிக்கெட்டில் புதுமையாக விளையாடலாம். ஆனால் கிரிக்கெட்டின் அடிப்படை எப்போதுமே மாறாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement