இரட்டைசதம் அடித்த யாஷஸ்வி சாப்பாட்டிற்கு பட்ட கஷ்ட தெரியுமா ? – விவரம் இதோ

Jaiswal-3
- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சமீபத்திய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஜார்கண்ட் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ற 17 வயது சிறுவன் களமிறங்கினார்.

Jaiswal

- Advertisement -

இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் சிறப்பான ஆட்டத்தால் அனைத்து பந்து வீச்சாளர்களின் மிரட்டினார். 154 பந்துகளை சந்தித்த அவர் 12 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் என 203 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதனால் கிரிக்கெட் உலகில் தற்போது யாஷஸ்விக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் ஒரே இரவில் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வீரராக அவர் மாறி இருக்கிறார். இவர் கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக உரியவர் என்றும் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அவருடைய கடந்து வந்த பாதை குறித்து இந்த பதிவில் காண்போம்.

Jaiswal-2

11 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவுகளுடன் யாஷஸ்விக்கு கிரிக்கெட் விளையாட நினைத்தபோது தங்குவதற்கு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரு பால்பண்ணையில் படுத்து உறங்கி மேலும் அதன் பிறகு வேலை கேட்டும் யாரும் கொடுக்கவில்லை ஒரு பக்கம் கிரிக்கெட் மற்றொரு பக்கம் சாப்பாட்டுக்காக பானி பூரி விற்க துவங்கினார்.

Jaiswal-4

அதன் மூலம் வரும் சிறு வருவாய் உதவியுடன் பசியை போக்கிக்கொண்டார். அத்துடன் மைதானங்களில் பந்து பொறுக்கிப் போடும் வேலையும் செய்துள்ளார். அதன் பிறகு அவரது பேட்டிங் திறனால் ஈர்க்கப்பட்ட வாலாசிங் என்ற இந்திய ஏ அணி கிரிக்கெட் வீரர் அவரை ஸ்பான்சர் செய்து பயிற்சியும்கொடுத்து வருகிறார். தற்போதும் அவருடன் மும்பையில் வசித்து வருகிறார். வாலாசிங் அவரது குடும்ப உறுப்பினர் போல யாஷஸ்வியை பாவிக்கிறார். இருந்தாலும் ஒரு பயிற்சியாளராக அவரிடம் கடினமாக நடந்து பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement