அவரோட கைகள கட்டவே முடியாது.. இந்த பையன் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவாரு.. கவாஸ்கர் நம்பிக்கை

Sunil Gavaskar 555.jpeg
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியாவுக்காக வருங்காலத்தில் விளையாட நிறைய இளம் வீரர்கள் தற்சமயத்தில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வந்த அவர் 2023 சீசனில் அதிவேகமாக (13 பந்துகளில்) அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து 625 ரன்கள் விளாசினார். அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
அதை தொடர்ந்து சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதி டி20 போட்டியில் சதமடித்த அவர் அத்தொடரில் இந்தியா தங்க பதக்கம் வெல்வதற்கு உதவினார். அப்படி டெஸ்ட் முதல் டி20 வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இப்படி தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் வருங்காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய வீரராக உருவெடுப்பார் என்று நம்புவதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல திறமையுடைய வீரரான யசஸ்வி ஜெய்ஸ்வால் இடது கை வீரராக எக்ஸ்ட்ரா சாதகத்தை அணிக்கு கொண்டு வருகிறார்”

- Advertisement -

“இளமைக்கு தேவையான தைரியமும் புத்துணர்ச்சியும் கொண்டுள்ள அவர் இப்படித்தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி தன்னுடைய கைகளை கட்டிக்கொண்டு விளையாடுவதில்லை. மாறாக பந்தை பார்த்து அடிப்போம் என்ற ஸ்டைலை பின்பற்றி அவர் விளையாடுகிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதமும் அடித்துள்ளார்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 ஏலம் : 1166 பேருக்கு ஃபில்டர்.. வெளியான இறுதி பட்டியல்.. முதலில் வரும் வீரர்கள் லிஸ்ட் இதோ

“எனவே அவர் வருங்காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக நன்றாக விளையாடக்கூடிய திறமையை கொண்டு உள்ளார்” என்று கூறினார். இந்த நிலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement