சச்சின் மற்றும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்த அண்டர் 19 கேப்டன் யாஷ் துள் – இவர் வேற லெவல் போலயே

Dhull
- Advertisement -

இந்திய அணி இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை அணியை இளம் வீரரான யாஷ் துள் வழிநடத்தினார். அவரது தலைமையில் கோப்பையை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவித்தது மட்டுமின்றி பரிசு தொகையும் கிடைத்தது. அதேபோன்று குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

dhull 1

- Advertisement -

அந்தவகையில் அண்டர் 19 அணி இந்த உலக கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கேப்டன் யாஷ் துள் டெல்லி அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக அறிமுகமாகிய அவர் தான் விளையாடி வரும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 133 பந்துகளைச் சந்தித்த நிலையில் அவர் இன்று தமிழ்நாடு அணிக்கு எதிராக இந்த சதத்தை விளாசியுள்ளார்.

dhull 2

இன்று துவங்கியுள்ள இந்த ரஞ்சி கோப்பை தொடரானது ஜூன் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்று துவங்கிய டெல்லி மற்றும் தமிழக அணிகளுக்கிடையேயான ரஞ்சிப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய யாஷ் துள் 150 பந்துகளை சந்தித்த நிலையில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 82 ரன்கள், ஆஸ்திரேலிய அணிக்காக 110 ரன்கள் என இவர் அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இந்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

இந்நிலையில் இன்று அவர் ரஞ்சி கோப்பையில் பதிவு செய்த அறிமுக சதத்தின் மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான சச்சின் மற்றும் ரோஹித் ஆகியோரின் சாதனையை சமன் செய்து அவர்களின் வரிசையில் இணைந்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் தங்களது அறிமுகப் போட்டியில் சச்சின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசினர். அந்த வகையில் தனது அறிமுக போட்டியில் யாஷ் துள் சதம் விளாசி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement