ஆஷிஷ் நெஹ்ரா எனக்கு அப்பா மாதிரி. பாசத்தினை பொழிந்த குஜராத் அணியின் இளம்வீரர் – விவரம் இதோ

Nehra
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரானது மே மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று கிட்டத்தட்ட 74 ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த சீசனில் அறிமுக அணியாக விளையாடிய குஜராத் அணியானது தாங்கள் பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. குஜராத் அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் குஜராத் அணி வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்த குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் அந்த அணி குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் குஜராத் அணியில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்ற சில இளம் வீரர்களும் இந்த தொடரில் விளையாடியது குறித்த தங்களது அனுபவத்தை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் குஜராத் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயால் அந்த அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா உடன் இருக்கும் பிணைப்பு குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Dayal 1

இந்த ஆண்டு குஜராத் அணியில் நான் விளையாடியதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கள் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். அவருடைய வார்த்தைகள் என்னுடைய செயல்திறனில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பந்து வீச அவரே முக்கிய காரணம். பயிற்சியின் போதும் போட்டிக்கு முன்னரும் என்னிடம் நிறைய விடயங்களை பேசும் ஆஷிஸ் நெஹ்ரா இளம் வயதில் அவர் எவ்வாறு இருந்தாரோ அதே போன்று நான் இருப்பதாக என்னிடம் கூறினார். மேலும் நெருக்கடியான நேரத்தில் எப்படி நேர்த்தியாக பந்துவீச வேண்டும் என்பது குறித்தும் பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : அவருக்கு எதுக்கு ஓய்வு கொடுத்தீங்க? இதெல்லாம் தேவையில்லாத ஒரு வேலை – ஆர்.பி சிங் காட்டம்

இந்த தொடரில் அவருடைய வழிகாட்டுதலால் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இனி வரும் சீசன்களிலும் ஆஷிஷ் நெஹ்ராவின் வார்த்தையை மதித்து இன்னும் மிகச் சிறப்பாக செயல்படுவேன் என்று யாஷ் தயாள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement