அவருக்கு எதுக்கு ஓய்வு கொடுத்தீங்க? இதெல்லாம் தேவையில்லாத ஒரு வேலை – ஆர்.பி சிங் காட்டம்

RP-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. ஜூன் 9ஆம் தேதி துவங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

INDvsRSA toss

இந்த இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்றோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்து விடுவார்கள் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்துடன் இந்த தொடரை எதிர் கொள்வதால் இந்த தொடரை எவ்வாறு இந்திய அணி சமாளிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக இளம் வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohith

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுத்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா விளையாடி இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

- Advertisement -

ஏனெனில் தற்போது ரோகித் சர்மா கேப்டனாக விளையாடி வருவதால் தொடர்ச்சியாக இந்திய அணியில் பயணிக்க வேண்டும். அதோடு தற்போது அவருடைய பேட்டிங் பார்மும் மிகச் சிறப்பாக இல்லை. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் இந்த தொடரில் விளையாடுவதன் மூலம் மீண்டும் அவரின் இழந்த பார்மை மீட்டெடுத்து இருக்கலாம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : சரிவை சரிசெய்து கோப்பையை வெல்ல – கொல்கத்தா நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல்

ஆனால் தற்போது ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த ஓய்வு என்பது ரோஹித் சர்மாவிற்கு தேவையில்லாத ஒன்று என்றும் இதனால் இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை என ஆர்.பி.சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement